மாணவர்களின் கேள்விகளுக்கு கலாம் பதில்கள் (5)

எழுத்தின் அளவு :

கல்விமலர் இணையதளம் வழியாக மாணவர்கள் மற்றும் வாசகர்கள் அனுப்பிய கேள்விகளுக்கு டாக்டர் அப்துல் கலாம் இ-மெயில் வழியாக பதில் அனுப்பியுள்ளார்.


 


என்னைப் போன்ற மாணவர்கள் எதிர்காலம் சிறக்க தங்களுடைய வழிகாட்டுதல்கள் என்ன?
- பிரியங்கா, கக்கன் தெரு, மேற்கு தாம்பரம், சென்னை-45
- மனோஜ், ஆதர்ஷ் வித்யாலயா, அந்தியூர், ஈரோடு.


உங்களுடைய லட்சியத்தை முதலில் நிர்ணயித்துக் கொள்ளுங்கள். தடைகளை கொஞ்சம் கொஞ்சமாக தகர்த்து வெற்றி அடையுங்கள். நேர்மையான சிந்தனையை மனதில் பதித்துக் கொள்ளுங்கள். உங்களுடைய எதிர்காலம் சிறக்கும்.



கடலிலிருந்து எடுக்கப்படும் மின்சாரம் நமது தேவையை பூர்த்தி செய்யுமா?
- சித்ரா சத்தியமூர்த்தி, அண்ணா ஆதர்ஷ் கல்லூரி, திருவேற்காடு.


இந்தியாவின் கடற்கரை நீளம் 7,500 கி.மீ., அலைகளிலிருந்து மின் உற்பத்தி செய்யக்கூடிய சிறிய மின் உற்பத்தி ஆலைகளை நிறுவிக்கொள்ள வாய்ப்புள்ளது. குஜராத்திலும், கேரளாவிலும் இரு வகையான முன்மாதிரி திட்டங்கள் தற்போது செயல்படுகின்றன.


இந்தியாவின் எரிசக்தி உற்பத்தியில் அணு, நீர் மற்றும் அனல் மின் நிலையங்கள் மூலம் மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. 2020ம் ஆண்டில் 3 லட்சம் மெகாவாட் மின்சாரம் இந்தியாவுக்கு தேவைப்படும். இது தற்போதுள்ள தேவையை விட மும்மடங்காக இருக்கும். தோரியம் அடிப்படையிலான அணு உலைகள், சூரிய மின்சக்தியை பரவலாக பயன்படுத்துதல், கடல் அலை மின்சாரம் உள்ளிட்டவற்றிலிருந்து நாம் மின்சக்தி பெற வேண்டும்.


 


சிறந்த விஞ்ஞானி ஆக என்ன செய்ய வேண்டும்?
-  விகாஸ், கார்மல்ஸ் பள்ளி, திருச்சி
- ரோகிணி, சாய் மெட்ரிக் மேனிலை பள்ளி, மடிப்பாக்கம், சென்னை
- சரண்யா தேவி, ஸ்ரீ மீனாட்சி பெண்கள் கல்லூரி, மதுரை
- வெங்கடராமன், அரசு கலை அறிவியல் கல்லூரி, தர்மபுரி
- பாலசுப்ரமணியன், டி.ஏ.வி., மெட்ரிக் பள்ளி, சென்னை
- முகமது பர்ஹான், எஸ்.எம்.பி., மெட்ரிக் பள்ளி, திண்டுக்கல்
- ராமசுப்ரமணியன், காமராஜ் மேனிலைப்பள்ளி, குரும்பூர், துõத்துக்குடி
- அன்பு செல்வம், எம்.ஏ.வி.எம்.எம்., இன்ஜினியரிங் கல்லூரி, கிடாரிபட்டி, மதுரை
- விக்னேஷ், என்.எஸ்.என்., மெட்ரிக் மேனிலைப்பள்ளி, சிட்லபாக்கம், சென்னை
- விஜய் கார்த்திக், வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, மதுரை
- சுதா, டான்பாஸ்கோ மெட்ரிக் பள்ளி, சீனிவாசா நகர், சென்னை
- கீர்த்தனா, ஏ.வி.மெய்யப்பன் மெட்ரிக் பள்ளி, சென்னை
- ராகவி, வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி, திருமுல்லைவாயல், சென்னை
- பாஸில் கான், என்.எஸ்.என்.மெட்ரிக் பள்ளி, குரோம்பேட்டை, சென்னை


உங்கள் வாழ்க்கையில் முதலில் லட்சியத்தை வகுத்துக் கொள்ளுங்கள். இது விஞ்ஞானி ஆக வேண்டும் என்று முயற்சி செய்பவர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே லட்சியம் வேண்டும். நீங்கள் என்னவாக உருவாகப் போகிறீர்கள் என்பதை கற்பனை செய்து கொள்ளுங்கள். அது தொடர்பாக உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். கடினமாக அதை நோக்கி உழையுங்கள். விடா முயற்சியுடன் இவற்றை எல்லாம் செய்து வந்தால் நீங்கள் யார் என்பது முக்கியமில்லை. நீங்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையாலாம்.

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us