பொதுவாக இது போன்ற போட்டித்தேர்வு சிறப்புப் பயிற்சி நிறுவனங்களில் படிக்கும் போது சில நிறுவனங்கள் மட்டுமே கணிதம், ரீசனிங், ஆங்கிலம், பொதுஅறிவு, மார்க்கெட்டிங் மற்றும் கம்ப்யூட்டர் ஆப்டிடியூட் போன்றவற்றின் அடிப்படைகளை விளக்கிவிட்டு பின்பு அதில் போதிய பயிற்சிகளையும் தருகிறார்கள்.
எனினும் கடுமையான போட்டியை பாங்க் தேர்வுகள் கொண்டிருப்பதால், நீங்களாகவே வீட்டில் இவற்றில் அதிக பயிற்சியை செய்தால் தான் போட்டியில் உங்களால் வெற்றியை நோக்கி மற்றவரை விட வேகமாக செல்ல முடியும். எனவே இதை மனதில் கொண்டு பயிற்சியை மேற் கொள்ளுங்கள்.