புட் டெக்னாலஜி படித்து முடித்துள்ளேன். மதுரையில் வசிப்பதால் எனக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது பற்றிக் குழப்பமாக உள்ளது. | Kalvimalar - News

புட் டெக்னாலஜி படித்து முடித்துள்ளேன். மதுரையில் வசிப்பதால் எனக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது பற்றிக் குழப்பமாக உள்ளது.ஏப்ரல் 11,2009,00:00 IST

எழுத்தின் அளவு :


புட் டெக்னாலஜி, பயோடெக்னாலஜி போன்ற நல்ல படிப்புகளைப் படிக்க ஒருவர் நினைப்பதில் தவறில்லை. ஆனால் ஒவ்வொரு படிப்புக்குமான பணி வாய்ப்புகள் சில குறிப்பிட்ட இடங்களில் தான் உள்ளது. பயோடெக்னாலஜி, புட்டெக்னாலஜி போன்ற படிப்புக்கேற்ற பணிகளைக் கொண்டுள்ள நிறுவனங்கள் மதுரையில் குறைவு தான். அதிகபட்சமாக உங்களது தகுதிக்கேற்ற வேலையை நீங்கள் மதுரையிலுள்ள கார்ப்பரேட் மருத்துவமனைகளிலும் எஸ்.எல்.சி.சி., போன்ற ஒரு சில உடல்நல மையங்களில் மட்டுமே பெறமுடியும்.

அப்படியே பணி வாய்ப்பு கிடைத்தாலும் அங்கு தரப்படும் சம்பளம் மாநகரங்களில் கிடைக்கும் சம்பளங்களைப் போல அதிகமாக இருக்காது. காரணம் அவற்றுக்கான வாடிக்கையாளர்கள் மாநகரங்களைப் போல அல்லாமல் குறைவாகவே இருப்பது தான். எனவே முதலில் உங்கள் ஊரிலேயே உங்கள் தகுதிக்கேற்ற வேலைகளைப் பெற வேண்டும் என்ற சிந்தனையை தவிர்த்திடவும். பெரிய உணவகங்கள், கார்ப்பரேட் மருத்துவமனைகள் மற்றும் உடல்நல மேம்பாட்டு ஆலோசனை மையங்கள் போன்றவற்றில் உங்களுக்கான வாய்ப்புகள் உள்ளன. அதற்கேற்ப வேலை பெற முயற்சிக்கவும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us