அடிக்கடி நமது பகுதிக்கு வரும் கேள்வி இது. விமானத்தின் பிளைட் சூப்பர்வைசர், பர்சூவர்ஸ், ஏர்ஹோஸ்டஸ், பிளைட் அட்டென்டன்ட் என பல பணியாளர்களை மொத்தமாக ஆங்கிலத்தில் Flight Cabin Crew
விமானப் பயணத்தின் போது பயணிகளின் நலம், வசதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வது இவர்கள் அனைவருமாகத் தான். பயணிகளின் டிக்கெட்டுகளை சோதிப்பது, லக்கேஜ்களை பாதுகாப்பாக வைத்து பயணம் முடிந்த பின் திரும்பத் தருவது, அவசர நேரங்களில் எப்படி சீட் பெல்டுகளை போட்டுக்கொள்வது, கழற்றுவது, எப்படி அவசர கால உபகரணங்களை பயன்படுத்துவது போன்றவற்றை சொல்லிக் கொடுப்பது, அவசர கதவுகளை எப்படி பயன்படுத்துவது என அனைத்திலும் இவர்களின் பங்கு முக்கியமானது.
பயணத்தின்போது தேவைப்படும் உணவு, பானங்கள் போன்றவற்றை போதிய அளவு இருப்பில் கொள்வது, சரியாக வினியோகிப்பது, முதலுதவி உபகரணங்களை சரியாகப் பராமரிப்பது மற்றும் மேம்படுத்திக் கொள்வது, உணவையும் பானங்களையும் சப்ளை செய்வது, பயணிகளுக்கு உடல் நலம் இல்லாமல் போனால் உடனடியாக தேவைப்படும் மருத்துவம் செய்வது என இவர்கள் பல அம்சங்களில் சிறப்பான மேம்பட்ட பயிற்சியைப் பெற்றிருக்கின்றனர்.
ஏர் கேபின் கிரூ பணிக்குச் செல்ல விரும்புபவர்கள் பிளஸ் 2 படித்திருந்தால் போதும். எனினும் பட்டப்படிப்பு முடித்திருப்பவரே விரும்பப்படுகின்றனர். 17 முதல் 27 வயதுக்குள் இருப்பவர் தான் இதற்கு தேர்வு செய்யப்படுகின்றனர். குறைந்தபட்ச உடற்தகுதிகளும் இதற்குத் தேவைப்படுகின்றன. 157.5 செ.மீட்டருக்குக் குறையாத உயரம் ஒரு அளவீடாக உள்ளது.
பொதுவாக திருமணமாகாதவரே இப்பணிகளுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றனர். பொதுத் துறை விமான நிறுவனங்களான ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ், தனியார் விமான நிறுவனங்கள் என இன்று இத்துறையில் சிறப்புப் பயிற்சியும் திறனும் பெற்றவருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கின்றன. சில ஆண்டுப் பணிக்குப் பின் இவர்கள் சூப்பர்வைசர் நிலைக்கு பதவி உயர்வு பெறுகின்றனர். இத்துறையில் செயல்படும் சில பயிற்சி நிறுவனங்களின் பெயர்களைத் தருகிறோம்.
Indian Airlines Ltd. Central Training Establishment, Hyderabad;
Delhi Flying Club Ltd, New Delhi;
Sahara India Aviation Academy, New Delhi;
Skyline Educational Institute, New Delhi;
Flytech Aviation Academy, Secunderabad;
Indian Aviation Academy, Mumbai;
Kuoni Academy of Travel, Delhi;
Air Hostess Academy, Delhi;
Frankfinn Institute Of Air Hostess Training, Delhi
Freebird Aviation & Management Services, Trivandrum.
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக சென்னை, கோயம்புத்தூர் போன்ற இடங்களில் இத்துறையில் சில சிறப்புப் பயிற்சி நிறுவனங்கள் தோன்றி செயல்பட்டு வருகின்றன.