ஆட்டோமோடிவ் அல்லது ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்! | Kalvimalar - News

ஆட்டோமோடிவ் அல்லது ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்!

எழுத்தின் அளவு :

தமிழகத்தைப் பொறுத்தவரை, ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் என்பது, குறைந்தளவிற்கு, அதேசமயம், மாணவர்களால் விரும்பப்படும் துறையாக உள்ளது. இத்துறையின் சிறப்புகளைத் தெரிந்துகொண்டால் இந்நிலை மாறும்.

ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் என்பது, வாகனப் பொறியியல், மெக்கானிக்கல் அம்சங்களை ஒருங்கிணைப்பது, எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக், வடிவமைப்பில் பயன்படுத்தப்பட்டது போன்ற சாப்ட்வேர் மற்றும் பாதுகாப்பு பொறியியல், உற்பத்தி மற்றும் மோட்டார் இயந்திரங்களின் இயக்கம், ஆட்டோமொபைல்ஸ், பேருந்துகள் மற்றும் டிரக்குகள் மற்றும் அவை தொடர்பான புவியியல் துணை அமைப்புகள் ஆகியவற்றின் ஒரு பிரிவாகும்.

ஆட்டோமொபைல்களை, பழுது நீக்குவது, மேம்படுத்துவது மற்றும் வடிவமைப்பது ஆகியவைத் தொடர்பாக, மாணவர்களுக்கு பயிற்சியளிப்பதே இப்படிப்பின் நோக்கமாகும். வாகனங்களின் தேவை அதிகரித்து, ஆட்டோமொபைல் தொழில் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வரும் இக்காலகட்டத்தில், அத்துறை பொறியாளர்களுக்கான கிராக்கியும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சுற்றுசூழல் மாசுபாடு மற்றும் எரிபொருள் சேமிப்பு என்ற கருத்தாக்கங்கள் மிகவும் வலிமைப் பெற்றுள்ள இக்காலகட்டத்தில், இத்துறை பொறியாளர்களுக்கான சவால்கள் அதிகரித்துள்ளன. அனைத்து சூழல்கள் மற்றும் சுற்றுசூழல்களுக்கு ஏற்ற வகையிலான வாகனங்களை தயார்செய்ய வேண்டியுள்ளது.

ஒரு தகுதிவாய்ந்த ஆட்டோமொபைல் பொறியாளரின் கள நடவடிக்கைகள், மேம்பாடு(கட்டமைப்பு, கணக்கிடுதல் மற்றும் சோதித்தல்), பணியை நிறைவு செய்தல், தெருக்கள் மற்றும் ரயில் பாதைகளில் ஒரு வாகனத்தினுடைய செயல்பாட்டை கண்காணித்தல் மற்றும் மூலப் பொருட்களிலிருந்து கருவிகளை உருவாக்குதல்.

ஆட்டோமொபைல் பொறியாளர்கள், காரின் ஒட்டுமொத்த அமைப்பை மேம்படுத்துவதோடு, என்ஜின்கள், கிளட்சுகள், கியர்கள் மற்றும் ஸ்டியரிங்குகள் போன்ற தனித்தனி உறுப்புகளையும் தயாரிக்க வேண்டும். மேலும், தேவைக்கேற்பவும், கோரிக்கை மற்றும் வேண்டுகோளுக்கேற்பவும், வடிவமைப்பில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டிய பொறுப்பு அவர்களுடையது.

ஆட்டோமோடிவ் பொறியாளர்கள், ஆட்டோமோடிவ் கம்பெனிகள் உள்ளிட்ட பலவிதமான நிறுவனங்களில் பணியமர்த்தப்படுகிறார்கள். அச்சமயத்தில், அவர்களிடமுள்ள மெக்கானிக்கல், எலக்ட்ரிகல் மற்றும் உற்பத்தி ஆகிய துறைகளில் பொறியியல் திறனும் கணக்கில் கொள்ளப்படும். பெரியளவிலான ஆட்டோமொபைல், டிரக், பேருந்து, மோட்டார்சைக்கிள் நிறுவனங்களிலும், Racing Teams, Parts Manufacturers மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களிலும் பணிவாய்ப்புகளைப் பெறுகிறார்கள்.

திறன்வாய்ந்த பொறியாளர்கள், இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் உற்பத்தியகம், Chassis(ஒரு வண்டியின் மற்ற உறுப்புகள் பொருந்தி நிற்கும் உலோக அடிச்சட்டம்), வாகன உடலமைப்பு தயாரிப்பகம், வழங்கல் தொழிற்சாலைகள் மற்றும் பிற போக்குவரத்து கம்பெனிகளில் பணி வாய்ப்புகளைப் பெறுகிறார்கள்.

பல்துறை பொறியியல் அறிவை ஒருசேர பெற்றிருப்பதால், நமது ஆட்டோமொபைல் பொறியாளர்கள், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சிறப்பான பணி வாய்ப்புகளைப் பெறுகிறார்கள். மேலும், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் அடிப்படையில் இந்தப் படிப்பைக் கட்டமைத்துள்ளதால், மெக்கானிக்கல் பொறியாளர்களைத் தேடும் நிறுவனங்களிலும், ஆட்டோமொபைல் பொறியாளர்கள் பணி வாய்ப்புகளைப் பெறுகிறார்கள்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us