ஆஸ்திரேலியாவில் கல்வி பயில விரும்புகிறேன். ஆனால் சமீப காலமாக அங்கு நடக்கும் இனவெறித் தாக்குதல்களால் என் வீட்டில் என்னை அங்கு அனுப்ப மறுக்கிறார்கள். ஆஸ்திரேலிய படிப்பு நல்ல படிப்பு தானா? என்ன படிப்புகள் தரப்படுகின்றன? | Kalvimalar - News

ஆஸ்திரேலியாவில் கல்வி பயில விரும்புகிறேன். ஆனால் சமீப காலமாக அங்கு நடக்கும் இனவெறித் தாக்குதல்களால் என் வீட்டில் என்னை அங்கு அனுப்ப மறுக்கிறார்கள். ஆஸ்திரேலிய படிப்பு நல்ல படிப்பு தானா? என்ன படிப்புகள் தரப்படுகின்றன? செப்டம்பர் 26,2009,00:00 IST

எழுத்தின் அளவு :


உங்களது வீட்டினரின் கவலை மிக நியாயமானதே. எனினும் நீண்ட நாட்களுக்கு இந்த இனவெறித் தாக்குதல்கள் இருக்காது என்றும் நாம் நம்பலாம்.  உலக அளவில்ஆஸ்திரேலிய பல்கலைகழக படிப்புகளுக்கு உள்ள அங்கீகாரம், கலாசார மாறுபாடுகளை உள்ளடக்கிய பல்கலை துறைகள், ஆஸ்திரேலியாவின் சிறப்பான வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் ஆஸ்திரேலியா சிறந்த படிப்புகளுக்கான சரணாலயமாக திகழ்கிறது. இதனால் வெளிநாட்டு மாணவர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இவற்றில் புதுமையான கல்வி முறைகள், திறமை வாய்ந்த ஆசிரியர்கள் மற்றும் உலகத் தரம் வாய்ந்த கல்வி வசதிகள் வழங்கப்படுவதால், இங்கு பயிலும் மாணவர்கள் எதிர்கால சமுதாய தேவைக்கேற்ற முக்கிய அங்கமாக உருவாகிறார்கள். இங்கு சிறப்பான கல்வி தரப்படவேண்டும் என்ற நோக்கில் ஆஸ்திரேலிய அரசு அதிக மானியங்களையும் பிற உதவிகளையும் அதிக அளவில் தருகிறது. இதனால் ஆஸ்திரேலிய கல்வியானது அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளின் கல்விச் செலவை விட குறைவாகவே இருக்கிறது. பட்டப்படிப்பு, சான்றிதழ் படிப்புகள், பிஎச்.டி. போன்ற படிப்புகள் தரப்படுகின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட படிப்பைக் கூட இணைத்து ஒரே சமயத்தில் படிக்கும் வாய்ப்பும் உண்டு.

ஆஸ்திரேலிய கல்வியின் சிறப்பம்சங்கள் என வெளிநாட்டு நிறுவனங்களோடு கூடிய இணைந்து செயலாற்றும் உடன்பாடு, ஆய்வு நெறிமுறைகள் ஆகியவற்றைக் கூறலாம். ஆஸ்திரேலியாவில் 100க்கும் மேற்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையங்கள் உள்ளன. இதனால் ஆய்வுத் துறைகளில் ஆஸ்திரேலியாவே முதன்மையாக விளங்குகிறது.

மரபியல், பயோடெக்னாலஜி, நானோடெக்னாலஜி மற்றும் விளையாட்டு தொடர்பான துறைகளில் ஆஸ்திரேலியா முன்னணியில் உள்ளது. விளையாட்டை அறிவியல் நோக்கில் அணுகுவதால் கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களில் ஆஸ்திரேலியா பல ஆண்டுகளாக உலக சாம்பியனாக திகழ்கிறது. மரபு சார்ந்த மற்றும் மரபு சாரா துறைகளில் புதுமையான பல படிப்புகளை ஆஸ்திரேலியா அறிமுகப்படுத்தியிருக்கிறது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us