வைராலஜி படிப்பு | Kalvimalar - News

வைராலஜி படிப்பு

எழுத்தின் அளவு :

புதிதுபுதிதாக உருவாகிவரும் வைரல் நோய்கள் மக்களை பீதியடைய வைக்கின்றன. இந்த வைரல் தொற்றுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வது பெரிய சவாலாக உள்ளது. எனவே இந்த சிக்கலை தீர்ப்பதற்கான நிபுணர்களின் தேவையும் இயல்பாகவே எழுகிறது. அது தொடர்பான படிப்பை பற்றி இக்கட்டுரை அலசுகிறது.

வைராலஜி என்றால் என்ன?

வைரஸ்கள் பற்றியும், அதன் செயல்பாடுகள் பற்றியும், அது எவ்வாறு தொற்றுகிறது என்பதைப் பற்றியும் படிப்பதே வைராலஜி எனும் படிப்பு. ஆராய்ச்சிகள் மற்றும் தெரபிகளில் வைரஸ்கள் எவ்வாறு வெவ்வெறு விதங்களில் பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பற்றி விரிவாக படிப்பதாகும். ஒருவகையில் இப்படிப்பானது, மைக்ரோபயாலஜி அல்லது பேதாலஜி ஆகிய படிப்புகளின் ஒரு பகுதியாகவும் கருதப்படுகிறது.

உயிர் பொருட்கள் மற்றும் உயிரற்ற பொருட்களில் வைரஸ்களின் செயல்பாடுகளைக் கண்காணித்தல் மற்றும் அதன் விளைவுகளை ஆய்வுசெய்தல் போன்றவை ஒரு வைராலஜிட் -ன் முக்கியப் பணிகளாகும். மேலும் இது, டிஷ்யூ கல்சர், செல் பயாலஜி, பயோ இன்பர்மேடிக்ஸ், அப்ளைடு எபிடெமியாலஜி, என்டமாலஜி மற்றும் அட்வான்ஸ்டு இம்யூனாலஜி போன்ற பலவாறாக விரிவடைகிறது.

எதிர்கால வாய்ப்புகள்

வைரஸ்களைப் பற்றி ஆழமாக ஆராய்வதானது, மலேரியா, எய்ட்ஸ, போலியா, கால்நடை மற்றும் தாவரங்களுக்கு ஏற்படும் வைரஸ் நோய்கள் போன்ற பல கேடுகளை நீக்க உதவும். எனவே, இத்துறைக்கு என்றுமே மவுசு குறையாது. எனவே, தொற்று நோய்கள் மற்றும் பொது சுகாதாரம் ஆகியவற்றில் அடிப்படை மற்றும் அப்ளைடு அறிவு ஆகியவற்றுக்கான தேவை உள்ளது.

சுகாதாரத் துறையில் நமது அரசாங்கம் அதிகளவில் முதலீடு செய்வதால், எதிர்காலத்தில் உலகளவில், சுகாதாரத்துறை மற்றும் வைராலஜி படிப்புகளில் முதலிடத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சவால்கள்

இத்துறை சார்ந்த பணியானது பெரும்பாலும் ஆய்வகத்தில் என்பதால், ஒரு வைராலஜிஸ்ட், மிகவும் கவனமாகவும், தனது பார்வையில் கவனம் கொண்டவராகவும் இருத்தல் வேண்டும். பொதுவாக, வைரஸ்கள் சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்பவை என்பதால், ஒரு வைராலஜி நிபுணரின் பணி மிகுந்த சவாலானதாக இருக்கிறது.

மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைப் புரிந்துகொள்ளுதல், வைரஸ் எதிர்ப்பு அம்சங்களை ஆய்வு செய்வது போன்ற செயல்பாடுகளின் மூலம், வைரஸ் தொற்றுகளை கட்டுப்படுத்தும் பணிக்கு அதிகளவு உழைப்பு தேவை.

கல்வி நிறுவனங்கள்

National Institute of Virology(NIV) - Pune(having 46 seats)
National Institute of Communicable diseases(NICD) - Delhi(having 20 seats)Manipal Centre for Virus research(MCVR) - Manipal(having 4 seats)

போன்ற கல்வி நிறுவனங்கள், நாட்டிலேயே இத்துறை சார்ந்த படிப்புக்கு பெயர்பெற்ற கல்வி நிறுவனங்கள் ஆகும்.

வைராலஜி தொடர்பான படிப்புகளை மேற்கொள்ள, இனிமேல் மாணவர்கள், வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டியதில்லை. தற்போது இந்தியக் கல்வி நிறுவனங்களே, உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்குகின்றன என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

தகுதிகள்

எம்.பி.பி.எஸ், லைப் சயின்ஸ் பாடத்தில் பி.எஸ்சி, பயோடெக்னாலஜி, மைக்ரோபயாலஜி, பயோகெமிஸ்ட்ரி அல்லது ஜுவாலஜி ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை, குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் முடித்திருந்தால் எம்.எஸ்சி வைராலஜி படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். அதேசமயம், நுழைவுத்தேர்வை எழுதுவது கட்டாயம். இளநிலைப் பட்டப்படிப்பு நிலையில், ஆய்வக அனுபவம் இருந்தால், அது ஒரு கூடுதல் தகுதியாக எடுத்துக்கொள்ளப்படும்.

வேலை வாய்ப்புகள்

ஒருவரின் ஆர்வத்தைப் பொறுத்து, மருத்துவமனைகள், மருத்துவக் கல்வி நிறுவனங்கள், மருத்துவ ஆராய்ச்சி மற்றும் பார்மசூடிகல் நிறுவனங்கள், அரசு ஏஜென்சிகள், பேதாலஜி ஆய்வகங்கள் அல்லது ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணி வாய்ப்புகளைப் பெறலாம்.

சம்பளம்

ஒரு வைராலஜிஸ்ட், தனது அனுபவம் மற்றும் பணிபுரியும் இடம் ஆகியவற்றைப் பொறுத்து மாதம் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை பெறுவார்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us