விஷூவல் எபெக்ட்ஸ் படிக்க ஆசையா... | Kalvimalar - News

விஷூவல் எபெக்ட்ஸ் படிக்க ஆசையா...

எழுத்தின் அளவு :

இளைஞர்கள் மத்தியில், தொழில்நுட்பம் சார்ந்த படிப்பு களுக்கு என்றுமே ஈர்ப்பு அதிகம். அந்த வகையில், தற்போது திருமண விழா முதல் திரைப்படம் வரை, விஷூவல் எபெக்ட்ஸ் தொழில்நுட்பம் புரட்சி செய்து வருகிறது. இத்துறை சார்ந்த படிப்புகளுக்கு தற்போது மவுசு அதிகம்.

மூன்று ஆண்டு இளநிலை படிப்பு, 1 ஆண்டு டிப்ளமோ படிப்பு மற்றும் முதுநிலை படிப்பு என பல்வேறு பிரிவுகளில் கீழ்க்கண்ட கல்வி நிறுவனங்களில் விஷூவல் எபெக்ட்ஸ் தொடர்பான படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இப்படிப்புக்கு பிளஸ் 2 தகுதி போதுமானது.

* இமேஜ் காலேஜ் ஆப் ஆர்ட்,
அனிமேஷன் மற்றும் டெக்னாலஜி (ஐ.சி.ஏ.டி.,), சென்னை.
(www.icat.ac.in/index.asp)
* சிரிஷ்டி ஸ்கூல் ஆப் ஆர்ட்,
அனிமேஷன் மற்றும் டெக்னாலஜி, பெங்களூரு. (http://srishti.ac.in/)
* பிக்காஸோ அனிமேஷன்
காலேஜ், டில்லி மற்றும் நொய்டா, (http://www.picasso.co.in/)

இந்தியாவில் இது வேகமாக வளரும் துறை. வெளிநாட்டில் அதிக வேலை வாய்ப்புகள் உள்ளன. இப்படிப்பை வெற்றிக்கரமாக முடித்தவர்கள், டிஜிட்டல் ஆர்டிஸ்ட், கம்போசிடர், டிஜிட்டல் எபெக்ட்ஸ் அனிமேட்டர், டிஜிட்டல் எபெக்ட்ஸ் பெயின்டர், மாடலர், ப்ரீவிஷூவலைசேசன்ஸ் ஆர்டிஸ்ட்,
டெக்னிக்கல் டைரக்டர் மற்றும் விஷூவல் எபெக்ட்ஸ் சூப்பர்வைசர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணிபுரியலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us