பி.எஸ்சி. இயற்பியல் படிப்பவர்கள் எம்பெடட் டெக்னாலஜி துறையில் வேலை பெற முடியுமா? | Kalvimalar - News

பி.எஸ்சி. இயற்பியல் படிப்பவர்கள் எம்பெடட் டெக்னாலஜி துறையில் வேலை பெற முடியுமா?பிப்ரவரி 02,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

தகவல் தொடர்புத் துறையின் முக்கிய வார்த்தை இந்த எம்பெடட் டெக்னாலஜி. இதில் சிறப்புத் திறன் பெற்றிருப்பவருக்குக் அதிக தேவை இருக்கிறது. அடுத்த சில ஆண்டுகளுக்கு இது அதிகரித்துக் கொண்டே போகும் என கணிக்கப்படுகிறது. எந்த ஹார்ட்வேரில் இயங்குகிறதோ, அந்த ஹார்ட்வேரில் குறிப்பிட்ட சாப்ட்வேரை மறைத்து இயக்குவதை இது குறிக்கிறது. குறிப்பிட்ட பணிக்காக குறிப்பிட்ட கால அளவுக்குள் இது இயங்குமாறு செய்யப்படுகிறது.

பி.டி.ஏ., பொம்மைகள், ஆட்டோமொபைல், மொபைல் போன்கள், மைக்ரோவேவ் ஓவன், மியூசிக் சிஸ்டம்கள், டிஜிடல் கேமராக்கள், டிவி, எம்.பி3 பிளேயர், ஏ.டி.எம்., டிராபிக் சிக்னல்கள் என இன்று இந்தத் தொழில் நுட்பத்தை பயன்படுத்தும் உபகரணங்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஏ.சி. போன்றவற்றில் ஆட்டோமெடிக் வெப்பநிலை மாறிகளிலும் இது பயன்படுகிறது. நமது வாஷிங்மெஷின்களில் துணிகளுக்கேற்ப வேகத்தை மாற்றவும், மைக்ரோவேவ் ஓவன்கள் தானாகவே யோசித்து செயல்படவும் விண்வெளியில் ராக்கெட்டுகளை ஏவுவதிலும் இது தான் உதவுகிறது.

மைக்ரோசிப்களைப் போன்ற எம்பெடட் உபகரணங்கள் பிரத்யேக சாப்ட்வேர்களைக் கொண்டிருக்கின்றன. பொதுவாக இத்துறையில் பி.இ. எலக்ட்ரானிக்ஸ், எம்.சி.ஏ., பி.சி.ஏ., பி.எஸ்சி. இயற்பியல் படித்தவர்கள் எடுத்துக் கொள்ளப்படுகிறார்கள். வெளிநாடுகளில் இத் துறையில் பல படிப்புகள் தரப்பட்டாலும், இந்தியாவில் சில இடங்களில் மட்டுமே இது தொடர்பான படிப்புகள் தரப்படுகின்றன.

சி-டாக் எனப்படும் மத்திய அரசு நிறுவனம் இதில் டிப்ளமோ இன் எம்பெடட் சிஸ்டம்ஸ் டிசைன் படிப்பைத் தருகிறது. 6 மாட்யூல்களைக் கொண்ட 5 மாத முழு நேரப் படிப்பு இது. இதில் ஒரு புராஜக்டும் செமினாரும் உண்டு. தினமும் 2 மணி நேர தியரி வகுப்புகளும் 4 மணி நேர நடைமுறைப் பயிற்சியும் இதில் தரப்படும்.

விண்ணப்பிக்க நினைப்பர்கள் எலக்ட்ரானிக் சர்க்யூட் பற்றிய திறனையும், அனலாக், டிஜிடல் டிசைன், மைக்ரோபுராசசர், கம்ப்யூட்டர் ஆர்க்கிடெக்சர், சி புரொகிராமிங், டேட்டா ஸ்ட்ரக்சர், டேட்டா கம்யூனிகேஷன், நெட்வொர்க்கிங் மற்றும் ஓ.எஸ். ஆகியவற்றில் நல்ல திறன் பெற்றவராக இருப்பது முக்கியம்.

நுழைவுத் தேர்வு மூலமாக இதற்கு தேர்வு செய்யப்படுவீர்கள். இது தவிர மிஸ்ட்ரல் சாப்ட்வேர் பிரைவேட் லிமிடெட் என்னும் பெங்களூருநிறுவனமும் இதில் முதுநிலை டிப்ளமோ படிப்பைத் தருகிறது. 

இவற்றின் முகவரிகளை உங்களுக்காகத் தருகிறோம்.
CDAC’s Advanced Computing Training School, / No. 1, Old Madras Road, Above Bank of Mysore, Near NGEE / Bangalore – 560 038.

Mistral Software Pvt Ltd / No 60, ‘Adarsh Regent’, 100 Ft Ring Road, / Domlur Extension, Bangalore – 560 071 / Phone: 25356400. Manvish Infotech Limited / No 502, Prestige Meridian II, MG Road, / Bangalore – 560 00.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us