ஏரோநாடிக்கல் படிக்க பூமிகா ஆசை | Kalvimalar - News

ஏரோநாடிக்கல் படிக்க பூமிகா ஆசை

எழுத்தின் அளவு :

சென்னை மேற்கு மாம்பலம் சேர்ந்த மாணவி பூமிகா சம்ஸ்கிருதத்தை மொழி பாடமாக எடுத்து மாநிலத்திலேயே முதலாவதாக வந்துள்ளார்.

சென்னை சூளைமேடு டிஏவி பள்ளியில் படித்த இவர் 1190 மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் தமிழ் அல்லாத பிற மொழி பாடத்தை எடுத்தவர் என்பதால் இவருக்கு மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் எடுத்தவர் என்ற பெருமை கிடைக்கவில்லை. இதனால் இவருக்கு சம்ஸ்கிருத மொழி பாடத்தில் முதலாவதாக வந்தவர் என்ற பெருமை மட்டுமே கிடைத்துள்ளது.

மாணவி கூறுகையில், ‘எனது பெற்றோரும், ஆசிரியர்களும், சக மாணவர்களும் நீ நன்றாக படித்தால் முதலாவதாக வரலாம் என ஊக்கமளித்தனர். ஆசிரியர்களின் அறிவுரையை கடைபிடித்ததால் என்னால் முதலாவதாக வர முடிந்தது. இனி ஏரோநாடிக்கல் படிக்க விரும்புகிறேன்’ என்றார்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us