சந்தோஷ் (பிளஸ் 2 மாநில 3 ம் இடம்) | Kalvimalar - News

சந்தோஷ் (பிளஸ் 2 மாநில 3 ம் இடம்)

எழுத்தின் அளவு :

இன்ஜினியரிங் படித்து முடித்து, சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவேன் என, சென்னை கல்வி மாவட்டத் தில், வேற்று மொழி பாடத்தை தேர்வு செய்து மூன்றாம் இடம் பிடித்த நிதின் சந்தோஷ் கூறினார்.

சூளைமேடு கில் நகர் டி.ஏ.வி.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் நிதின் சந்தோஷ், வேற்றுமொழி பாடப் பிரிவில் சமஸ்கிருதத்தை எடுத்து படித்தார். பிளஸ் 2 தேர்வில் 1,185 மதிப்பெண்கள் பெற்றார். அதன் விவரம்: சம்ஸ்கிருதம் 198, ஆங்கிலம் 191, இயற்பியல் 197, கணிதம் 199, வேதியியல் 200, கம்ப்யூட்டர் சயின்ஸ் 200.

பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர், நண்பர்கள் ஊக்கம் கொடுத்ததால், நல்ல மதிப்பெண் பெற முடிந்தது. என்னுடைய பள்ளியை சேர்ந்த நண்பர் பிரதீப் ராஜா, மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். இன்ஜினியரிங் படித்து முடித்து, சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் முடிவில் உள்ளேன். இவ்வாறு சந்தோஷ் கூறினார்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us