அபிநயா (பிளஸ் 2 மாநில 3ம் இடம்) | Kalvimalar - News

அபிநயா (பிளஸ் 2 மாநில 3ம் இடம்)

எழுத்தின் அளவு :

ஈரோடு திண்டல் பி.வி.பி., பள்ளியை சேர்ந்தவர் மாணவி அபிநயா. இவர், 1,185 மதிப்பெண் பெற்று, மாநில அளவில் மூன்றாமிடம் பெற்றார்.

மாணவி அபிநயா கூறியதாவது:
பிளஸ் 2 தேர்வில் மாநிலத்தில் மூன்றாமிடமும், மாவட்டத்தில் முதலிடம் வந்தது சந்தோஷமாக உள்ளது. தந்தை பாலகிருஷ்ணன் சொந்தமாக எலக்ட்ரிக்கல் நிறுவனம் வைத்துள்ளார். தாய் ராஜேஸ்வரி மின்சார வாரியத்தில் இளநிலை பொறியாளராக உள்ளார்.  பி.இ., இன்ஜினியரிங் பாடப்பிரிவில் எலக்டிரிக்கல் பாடம் எடுத்து படிக்க விருப்பம் உள்ளது.

நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக, நான்கு ஆண்டுக்கு முன்பே, என் பெற்றோர் டிவி கேபிள் இணைப்பை கட் செய்து விட்டனர். எனக்கு மியூசிக்கில் அதிக ஆர்வம் உண்டு. நான் அதிக மதிப்பெண் பெறுவதற்கு, பள்ளி தாளாளர் ராமகிருஷ்ணன், முதல்வர் மற்றும் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் கொடுத்த ஊக்கமே காரணம். இவ்வாறு அவர் கூறினார். இவர், தமிழ் 193, ஆங்கிலம் 192, இயற்பியல் 200, வேதியியல் 200, தாவரவியல் 200, கணிதம் 200 என, மொத்தம் 1,185 மதிப்பெண் பெற்றுள்ளார். 

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us