பிரியதர்ஷிணி (பிளஸ் 2 மாவட்ட முதலிடம்) - 2010 | Kalvimalar - News

பிரியதர்ஷிணி (பிளஸ் 2 மாவட்ட முதலிடம்) - 2010

எழுத்தின் அளவு :

ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி மாவட்ட அளவில் முதலிடத்தை பிடித்து சாதனை புரிந்துள்ளனர். இப்பள்ளியில் படித்த பிரியதர்ஷிணி, 1141 மதிப்பெண்கள் பெற்று மாநகராட்சிப் பள்ளிகளில் முதலிடத்தை பிடித்துள்ளார். பாடவாரியாக இவர் பெற்ற மதிப்பெண் விபரம்: தமிழ் 180, ஆங்கிலம் 175, இயற்பியல் 194, வேதியியல் 197, கணிதம் 200, கம்ப்யூட்டர் சயின்ஸ் 195. பிரியதர்ஷிணியின் தந்தை பொற்கொல்லராக பணிபுரிகிறார்.

வெற்றி பற்றி பிரியதர்ஷிணி கூறுகையில், அதிக மதிப்பெண் பெற பள்ளி ஆசிரியர்கள் தான் காரணம். தினமும் காலையிலும் மாலையிலும் பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடத்தினர். விடுமுறை நாட்களில் கூட காலை முதல் மாலை வரை சிறப்பு வகுப்புகள் நடத்தி பயிற்சி அளித்தனர். என்னால் முதலிடம் பிடிக்க முடியும் என பெற்றோரும் உறவினர்களும் அடிக்கடி கூறி வந்ததும் எனக்கு நம்பிக்கை அளித்தது, என்றார்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us