பயோ டெக்னாலஜி இன்ஜினியரிங், பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் படிப்பிற்கு வித்தியாசம் என்ன? | Kalvimalar - News

பயோ டெக்னாலஜி இன்ஜினியரிங், பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் படிப்பிற்கு வித்தியாசம் என்ன?ஜூன் 01,2011,00:00 IST

எழுத்தின் அளவு :

பயோ டெக்னாலஜி இன்ஜினியரிங் படிப்பு பயாலஜி மற்றும் கணித மாணவர்களுக்கு அளிக்கப்படும். இதில் 60 விழுக்காடு பயாலஜியும், 40 விழுக்காடு டெக்னிக்கலும் சேர்ந்த பாடமாக இருக்கும். பயாலஜியில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு இது மிகச் சிறந்த தேர்வாகும். ஆராய்ச்சியில் ஈடுபடும் அளவிற்கு இந்த படிப்பு முக்கியத்துவம் உள்ளது.

பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் படிப்பு என்பது, மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் கருவிகளைப் பற்றி படிப்பதாகும். கருவிகளை வடிவமைப்பது, புதிய கருவிகளை கண்டுபிடிப்பது, அவற்றை கையாளும் விதங்களை படிப்பதுதான் பயோ மெடிக்கல் இன்ஜினியரிங். மருத்துவமனையில் பெரிய கருவிகளை இயக்கும் பணிகளிலும், ஆய்வகங்களிலும் இந்த படிப்பினை படித்த மாணவர்கள் வேலை செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us