தேசிய கட்டடக்கலை திறனறிவு தேர்வு | Kalvimalar - News

தேசிய கட்டடக்கலை திறனறிவு தேர்வு

எழுத்தின் அளவு :

1. எத்தனை வழிகளில் கட்டடக்கலை இன்ஜினியரிங் பிரிவில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது?
நாட்டில் மூன்று வழிகளில் கட்டடக்கலை இன்ஜினியரிங் பிரிவில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ஏ.ஐ.இ.இ.இ., நுழைவுத் தேர்வு மற்றும் தேசிய கட்டடக்கலை திறனறிவு தேர்வு  நடா வழியாகவும் மாணவர் சேர்க்கைக்கு கவுன்சில் ஆப் ஆர்க்கிடெக்சர் ஒப்புதல் அளித்துள்ளது. இது தவிர நாட்டிலுள்ள ஐ.ஐ.டி.,கள் அவற்றுக்கு என்று தனியாக ஜே.இ.இ., தேர்வு மூலம் சேர்க்கையை அனுமதிக்கின்றன.

2. நடா தேர்வை நடத்துவது யார்?
National Institute for Advanced Studies in Architecture (NIASA) எனும் புனேயில் உள்ள நிறுவனம் நடத்துகிறது.

3.தேர்வு நடைபெறும் தேதி எது?
இந்த தேர்வு ஆண்டின் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டும் நடப்பது அல்ல. ஜனவரி 1 முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை பல்வேறு மாநிலங்களில் அமைந்துள்ள 41 தேர்வு மையங்களில் தேர்வு எழுதலாம். தேர்வு மையங்களில் ரூ.800 செலுத்தி அனுமதிக் கடிதத்துடன் தேர்வு எழுதலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us