நான் எலக்ட்ரானிக்ஸ் டிப்ளமோ தகுதி பெற்றிருக்கிறேன். ஏ.எம்.ஐ.இ., பகுதி நேர பி.இ., படிப்புகள் தவிர பிற முறைகளில் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்திருப்பவர் இன்ஜினியரிங் பட்டம் பெற முடியுமா? | Kalvimalar - News

நான் எலக்ட்ரானிக்ஸ் டிப்ளமோ தகுதி பெற்றிருக்கிறேன். ஏ.எம்.ஐ.இ., பகுதி நேர பி.இ., படிப்புகள் தவிர பிற முறைகளில் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்திருப்பவர் இன்ஜினியரிங் பட்டம் பெற முடியுமா?மார்ச் 07,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேஷன்ஸ் துறைக் கல்வியில் முக்கியமான நிறுவனமாக விளங்குவது ஐ.இ.டி.இ., எனப்படும் Institute of Electronics and Telecommunications. கம்ப்யூட்டர், ஐ.டி., டெலிகம்யூனிகேஷன்ஸ் துறைகளின் மேம்பாட்டுக்காக செயல்படும் நிறுவனம் இது.

ஏ.எம்.ஐ.இ.டி.இ., எனப்படும் பட்டப்படிப்புகளையும் டி.ஐ.பி.ஐ.இ.டி.இ., எனப்படும் டிப்ளமோ படிப்புகளையும் இது நடத்தி வருகிறது. மத்திய அரசின் நிர்வாகப் பணியிடங்களுக்கு நியமனம் செய்ய இதன் பட்டப்படிப்புகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இது போலவே இதன் டிப்ளமோ படிப்புகளை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஏற்றுக் கொள்கிறது. இந்த நிறுவனம் பட்ட மேற்படிப்புகளையும் நடத்துகிறது.

இதன் பட்ட மேற்படிப்பில் சேர பி.இ.,பி.டெக்., ஏ.எம்.ஐ.இ.டி.இ., ஏ.எம்.ஐ.இ., தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். அல்லது எம்.சி.ஏ., கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ், இயற்பியல், கணிதம், புள்ளியியல், ஓ.ஆர்., இவற்றில் ஒன்றில் எம்.எஸ்சி., தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.

எம்.ஐ.இ.டி.இ.,யில் சேர 16 வயதுக்குக் குறைவாக இல்லாமலும் இயற்பியல் மற்றும் கணிதம் பாடங்களுடன் +2 தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். அல்லது டிப்ளமோ இன் எலக்ட்ரானிக்ஸ் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். எனவே இதில் நீங்கள் சேரலாம். முழு தகவல்களையும் விபரங்களையும் பார்த்துக் கொள்ளும் இணைய தள முகவரி: http://www.iete.org

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us