எம்.எஸ்சி., அட்மிஷன் | Kalvimalar - News

எம்.எஸ்சி., அட்மிஷன்

எழுத்தின் அளவு :

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமாக செயல்படும் தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.



முக்கியத்துவம்:


உலகெங்கிலும் அதிகரித்து வரும் தடயவியல் நிபுணர்களுக்கான தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன், கடந்த 2020ம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகம், தடயவியல், இணைய பாதுகாப்பு, டிஜிட்டல் தடயவியல் மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியல் ஆகியவற்றிற்கு அர்ப்பணிக்கப்பட்ட உலகின் முதல் பல்கலைக்கழகம் என்ற பெருமையையும் பெற்றள்ளது. 




வளாகங்கள்: குஜராத், டெல்லி, கோவா, திரிபுரா, போபால், புனே, குவகாத்தி மற்றும் மணிப்பூர் ஆகிய இடங்களில் இப்பல்கலைக்கழகத்தின் கல்வி வளாகங்கள் செயல்படுகின்றன.




படிப்புகள்: 


எம்.எஸ்சி., - பாரின்சிக் டென்டிஸ்ட்ரி  - 2 ஆண்டுகள்




தகுதிகள்: இந்திய பல் மருத்துவ கவுன்சிலின் அனுமதி பெற்ற ஏதேனும் ஒரு கல்வி நிறுவனத்தில் இளநிலை பல் மருத்துவ அறுவை சிகிச்சை - பி.டி.எஸ்., படிப்பில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., அல்லது மாற்றுத்திறனாளி மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதும்.



எம்.எஸ்சி., - பாரின்சிக் நர்சிங் - 2 ஆண்டுகள்




தகுதிகள்: இந்திய செவிலியர் கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற ஏதேனும் ஒரு கல்வி நிறுவனத்தில் செவிலியர் பிரிவில் இளநிலை அறிவியல் - பி.எஸ்சி., நர்சிங் படிப்பில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., அல்லது மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை உண்டு. மேலும், இந்திய செவிலியர் கவுன்சிலின் விதிமுறைப்படி குறைந்தது ஓர் ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.




விண்ணப்பிக்கும் முறை: இப்படிப்புகளுக்கு தகுதியுள்ள இந்திய மாணவர்கள் மட்டுமின்றி சர்வதேச மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். www.nfsu.ac.in/admission எனும் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். 




விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 30




கலந்தாய்வு நடைபெறும் நாள்: ஜனவரி 4




விபரங்களுக்கு: www.nfsu.ac.in


Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us