சிங்கப்பூர் | Kalvimalar - News

சிங்கப்பூர்

எழுத்தின் அளவு :

இன்றைய சூழலில் சமூக பொருளாதார தொழில்நுட்ப மாறுதல்கள் இந்த பரந்த உலகையே சிறு கிராமமாக மாற்றியுள்ளன. இதன் காரணமாக உலகின் மூலை முடுக்குகளிலிருந்தும் பல்வேறு திறமைகள் வெளிப்படுவதோடு, எங்கும் எவரும் சென்று பணியாற்றும் சூழலும் ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு வேலை வாய்ப்புகளை தாண்டி வெளிநாட்டிற்கும் சென்று நம் நாட்டினர் இன்று பணி புரியும் திறன் பெற்றுள்ளனர். இது போலவே படிப்பதற்கான வாய்ப்புகளும் நமது இளைய தலைமுறைக்கு வெகுவாக தற்போது வாய்த்துள்ளது. வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் வெவ்வேறு நாடுகளில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களைப் பற்றி காண இருக்கிறோம். இப் பகுதியில் சிங்கப்பூரில் உள்ள சில சிறந்த கல்வி நிறுவனங்களைப் பார்க்கலாம்.
நயங் டெக்னாலஜிகல் பல்கலைகழகம்
1955ல் தொடங்கப்பட்ட இந்த பல்கலைகழகம் உலகின் சிறந்த பல்கலைகழகங்களுல் ஒன்றாகக் கருதப்படுகிறது. உலகளாவிய மாணவர்கள் இன்று இங்கு படிக்கிறார்கள். கல்விப் புலத்திலும் ஆராய்ச்சியிலும் தனக்கென முத்திரை பதித்திருக்கிறது இப் பல்கலைகழகம். இதில் பின்வரும் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.

  • கலை, வடிவமைப்பு மற்றும் "டியா
  • உயிரியல்
  • பயோஇன்ஜினியரிங்
  • கெமிக்கல் மற்றும் பயோமாலிக்கூலர் இன்ஜினியரிங்
  • சிவில் மற்றும் சூழல் பொறியியல்
  • கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்
  • எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்
  • மெட்டீரியல் இன்ஜினியரிங்
  • மெக்கானிக்கல், புரடக்சன் இன்ஜினியரிங்
  • தகவல் மற்றும் மனிதவியல் தொடர்பான சமூக அறிவியல்
  • நான்யங் தொழில் நிர்வாகப் பள்ளி
    (வணிகவியல், கணிதம் மற்றும் தொழில் நிர்வாகம்)
  • என்.ஐ.இ. (கல்வியளாளர் கல்வி)
பல்வேறு துறைகளிலான படிப்புகளை இந்த பல்கலைகழகம் வழங்கினாலும் வணிகவியல் கணிதம் மற்றும் தொழில் நிர்வாகம் சம்பந்தப்பட்ட படிப்புகளில் பெரிய அளவில் புகழ் பெற்றிருக்கிறது. தற்போதுள்ள ஆசிய தொழில்சார் மாற்றங்களை இப் பல்கலைகழகம் தனது மாணவர்களுக்கு சிறப்பாக விளக்குகிறது. இது மட்டுமின்றி, தனது பல்கலைகழக மாணவர்களுக்கும் அங்கு பணியாற்றுபவர்களுக்கும் இடையே தகவல் தொடர்புகளை ஏற்படுத்தி படிக்கும் போதே பணியாற்றுவதன் நுணுக்கங்களை நடை முறையில் கற்றுத் தருகிறது.
இங்கு கல்வி பயில சராசரியாக ஆண்டுக்கு 23000 டாலர் செலவாகிறது. எனினும் மாணவர்களின் மெரிட் மற்றும் பொருளாதார நிலைக்கேற்ப கல்விக்கான உதவித் தொகையும் கடன் வசதிகளும் பல்கலை
கழகத்தால் தரப்படுகிறது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us