மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (சி.பி.ஆர்.ஐ) | Kalvimalar - News

மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (சி.பி.ஆர்.ஐ)ஜூலை 21,2011,00:00 IST

எழுத்தின் அளவு :

அறிமுகம்:

கட்டிடக் கலை அறிவியலில், மேம்பாடு, நுட்பம், தொழில்திறன் ஆகியவற்றை புகுத்தி, அந்த துறையில் நாட்டிற்கு சேவைசெய்யும் நோக்கத்தில் கடந்த 1947 -ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலம் ரூர்கியில் ஏற்படுத்தப்பட்டதுதான் மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்.

இந்த நிறுவனம் சி..பி(நெதர்லாந்து), பி.ஆர்..(பிரிட்டன்), .எஸ்.டி.எம்.(அமெரிக்கா), சி.எஸ்..ஆர்..(ஆஸ்திரேலியா) உள்ளிட்ட பல பன்னாட்டு அமைப்புகளுடன் ஒத்துழைப்பை மேற்கொண்டுள்ளது. மேலும் உள்நாட்டு அளவில், மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம், கிராமப் பகுதிகள் அமைச்சகம், வீட்டு வசதி வாரியங்கள் மற்றும் டி.எஸ்.டி. உள்ளிட்ட பல உயர்ந்த நிலைகளில் உறவு வைத்துள்ளது.

நோக்கம்:

* ஷெல்டர் திட்டமிடுதல்

* கட்டிடப் பொருட்கள்

* கட்டமைப்புகள் மற்றும் அடித்தளங்கள்

* கட்டிடப் பொருட்கள் மற்றும் அமைப்புகளின் முன்னேற்றத்திற்கு புதிய தொழில்நுட்பங்களை மேம்படுத்தல்

உள்ளிட்ட கட்டிட அறிவியலின் அனைத்து அம்சங்களிலும் அடிப்படை ஆராய்ச்சிகளை மேம்படுத்துவது இதன் நோக்கமாகும்.

ஆராய்ச்சி & மேம்பாட்டு பிரிவுகள்:

* கட்டுமான செயல்பாடு

* களிமண் தயாரிப்புகள்

* கட்டுமானம் & நீட்டிப்பு

* தீ பொறியியல்

* வீடுகட்டுதல் & திட்டமிடுதல்

* கிராமப்புற கட்டிடம் & சூழல்

* கட்டுமான பொறியியல்

உள்ளிட்ட பல ஆராய்ச்சி & மேம்பாட்டு பிரிவுகள் உள்ளன.

கல்வி & பயிற்சி வாய்ப்புகள்:

இந்த ஆராய்ச்சி நிறுவனம்(சி.பி.ஆர்.), கட்டிட ஆராய்ச்சி துறை சம்பந்தமாக, இரண்டு வருட முதுநிலை படிப்பை வழங்குகிறது. " உள்கட்டமைப்பு (கட்டிடங்கள்/சாலைகள்) மற்றும் பேரிடர் குறைப்பு" என்ற தலைப்பில் இந்த படிப்பு நடத்தப்படுகிறது.

பயிற்சிகள்:

பொறியாளர்கள், கட்டிடக்கலை நிபுணர், கைவினைஞர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆகியோருக்கு, கட்டிட அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் வெவ்வேறு துறைகளில் பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. இலங்கை, வியட்நாம், பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ் மற்றும் பூடான் போன்ற பல நாடுகளிலிருந்து இந்த பயிற்சிகளுக்காக இந்நிறுவனத்திற்கு ஆட்கள் வருகிறார்கள்.

இவற்றைப் பற்றி மேலும் தகவல்கள் அறிய www.cbri.res.in என்ற வலைதளத்திற்கு செல்லவும்.

ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள்:

ரூர்கியிலுள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்துடன்(..டி), சி.பி.ஆர்.. ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்துள்ளது. இதன்மூலம் இந்த இரண்டு நிறுவனங்களும் தங்களுக்கிடையேயான தொழில்நுட்பத் திறன்களை பகிர்ந்துகொள்ளும்.

இதைத்தவிர, ஆய்வுத்திட்டங்களில் ஒத்துழைப்பை ஏற்படுத்தவும், ஆராய்ச்சி & மேம்பாட்டு முயற்சிகளை பயன்மிக்க முறைகளில் மாற்றியமைக்கவும், தென்ஆப்ரிக்காவிலுள்ள எம்/எஸ் மெட்டா டைனமிக்ஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.

 

 

 

 

 

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us