மினரல்கள் மற்றும் மெட்டீரியல்கள் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.எம்.எம்.டி) | Kalvimalar - News

மினரல்கள் மற்றும் மெட்டீரியல்கள் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.எம்.எம்.டி)ஜூலை 21,2011,00:00 IST

எழுத்தின் அளவு :

அறிமுகம்

இந்தியாவில் ஏராளமான பொறியியல் கல்லூரிகள் இருந்தும், மினரல் இன்ஜினீயரிங் படிப்பானது எங்கும் இல்லாத நிலையே நிலவுகிறது. இதனால் இந்த துறையில் தேவையான ஆய்வாளர்களையோ, நிபுணர்களையோ பெறமுடியாத நிலையில், அதுசார்ந்த தொழில் நடவடிக்கைகள் பாதிப்பிற்கு உள்ளாயின.

இந்த மாபெரும் குறையை போக்கும்பொருட்டு, ஒரிசா தலைநகர் புவனேஸ்வரில் அமைந்த மினரல்கள் மற்றும் மெட்டீரியல்கள் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனமானது(.எம்.எம்.டி), அத்துறையின் மேம்பாட்டிற்கு சிறந்த சேவையாற்றி வருகிறது. இந்த ஆய்வு நிறுவனத்தில் மிகச்சிறந்த வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இத்துறை சார்ந்த நிபுணர்களுக்கு அதிக பற்றாக்குறை நிலவுவதால், சிறந்த ஆராய்ச்சியாளர்களையும், நிபுணர்களையும் அதிகளவில் உருவாக்கும்பொருட்டு இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனம் வழங்கும் படிப்புகள்:

.எம்.எம்.டி., மாணவர்களுக்கு ஒரு வருட முதுநிலை டிப்ளமோ, 2 வருட முழுநேர ரெசிடென்ஷியல் முதுநிலை பொறியியல் பட்ட ஆராய்ச்சி படிப்பு, பி.எச்டி. ஆராய்ச்சி படிப்பு மற்றும் கோடைகால பயிற்சி வகுப்புகள் போன்றவற்றை தனியாகவோ அல்லது வேறு கல்வி நிறுவனங்களுடன் இணைந்தோ நடத்துகிறது. மாணவர்களின் நலன் கருதி, இந்த படிப்புகளின் விவரங்களை இங்கே மிக தெளிவாக வரையறுத்து கொடுத்துள்ளோம்.

மினரல் இன்ஜினீயரிங் துறையில் 1 வருட முதுநிலை டிப்ளமோ:

இந்த படிப்பில் 2 செமஸ்டர்கள்(Semester) உள்ளன. முதல் செமஸ்டரில் தியரி வகுப்புகள், ப்ராக்டிகல்(Practical) செயல்முறைகள் போன்றவை இடம்பெற்றிருக்கும். இரண்டாவது செமஸ்டரில் ப்ராஜக்ட்(Project) பணிகள் இடம்பெறும்.

முதல் செமஸ்டர் பாட விவரம்:

* பண்புவகைப்படுத்தல்(characterisation) தொழில்நுட்பம்

* பொடியாக்குதல், வகைப்படுத்தல் மற்றும் சேகரித்தல்

* பிரிக்கும் செயல்பாடு

* நில முன்னேற்றம்(surface phenomena) மற்றும் அதன் பயன்பாடு

* சூழல் மற்றும் விரயமாதலை சரிப்படுத்தல்(waste treatment) மற்றும் நிறுவன சமூக பொறுப்பு

* தாது செயல்பாட்டில் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்

போன்ற தியரி பாடங்களோடு,

தாது பண்புவகைப்படுத்தல், பொடியாக்குதல், சேகரித்தல், காந்தவழி பிரித்தல், அட்டவணைப்படுத்தல், அளவு பிரித்தல் உள்ளிட்ட பல துறைகளில் சீரிய பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

இரண்டாம் செமஸ்டரில்,

.எம்.எம்.டி. அல்லது பிற தொடர்புடைய தொழிற்கூடங்களில் ப்ராஜக்ட் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இந்த படிப்பில் சேர்வதற்கான தகுதிகள்:

ஏதாவது தொழிற்கூடங்களில் வேலை செய்பவர்கள், 'உதவிபெறும்' வகையின்கீழ் இந்த படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் அதுபோல வேலை செய்யாதவர்கள், 'உதவிபெறாத' வகையின்கீழ் விண்ணப்பிக்கலாம். அதேசமயம் இந்த இரண்டு வகையினரும் படிப்பிற்கான பிற தகுதிகள், வயது வரம்பு மற்றும் அனுபவம் ஆகியவற்றை பெற்றிருக்க வேண்டும்.

இறுதிவருடம் பொறியியல் படிக்கும் மாணவர்களும், தங்களின் 7வது செமஸ்டர் வரையிலான மதிப்பெண் கிரேடுடன் இப்படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். அவர்கள் தேர்வு செய்யப்பட்டால், ப்ராவிஷனல்(provisional) முறையில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். அதேசமயத்தில் அவர்கள் அந்த படிப்பில் நீடிப்பது, தங்களின் தகுதிநிலை தேர்வுகளில் தேவையான மதிப்பெண்களை எடுப்பதை பொறுத்தே அமையும்.

அந்த தகுதிநிலை தேர்வுகள்:

* பொறியியல் தொழில்நுட்பத்தில் பட்டம் அல்லது அதற்கு சமமாக ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலை/கல்வி நிறுவனங்களிலிருந்து கெமிக்கல், மெக்கானிக்கல், மெட்டலர்ஜிகல், மினரல் மற்றும் மைனிங் இன்ஜினீயரிங் பட்டம்.

* உதவிபெறும் விண்ணப்பதாரர்கள், வேதியியல் அல்லது ஜியாலஜியில் எம்.எஸ்சி. பட்டம் பெற்றிருந்தால் அவர்களின் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும்.

இட ஒதுக்கீடு:

SC/ST/OBC/PH போன்ற பிரிவினருக்கான இடஒதுக்கீடு, விதிகளின் அடிப்படையில் இருக்கும். ஆனால் இந்த சலுகை, 'உதவிபெறாத' வகையின்கீழ் வரும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

வயது வரம்பு:

'உதவிபெறாத' வகையின்கீழ் வரும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சம் 30 வயது. 'உதவிபெறும்' வகையின்கீழ் வரும் விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு இல்லை. அதேசமயம் 'உதவிபெறாத' வகையின்கீழ் வரும் விண்ணப்பதாரர்களில், SC/ST/OBC/PH வகையினருக்கு விதிகளின்படி வயது தளர்வு சலுகை வழங்கப்படும்.

மாணவர் சேர்க்கை முறை:

* இப்படிப்பிற்கான சேர்க்கையானது, கல்விப் பின்னணி, அனுபவம்('உதவிபெறும்' வகையினருக்கு மட்டும்) மற்றும் நேர்முகத்தேர்வில் மாணவரின் செயல்பாடு போன்றவற்றின் அடிப்படையில் இருக்கும்.

* சேர்க்கை விஷயத்தில் .எம்.எம்.டி. இயக்குனரின் முடிவே இறுதியானது.

* சேர்க்கை விஷயங்களில் ஏற்படும் சர்ச்சைகளால் உண்டாகும் வழக்குகளை, ஒரிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்திலுள்ள பொருத்தமான நீதிமன்றங்களில் மட்டுமே விசாரிக்க முடியும்.

முதுநிலை பட்ட ஆராய்ச்சி படிப்பு:

மெடீரியல் ரிசோர்ஸ் இன்ஜினீயரிங் படிப்பில் 2 வருட முதுநிலை பட்ட ஆராய்ச்சி படிப்பு நடத்தப்படுகிறது. இந்த துறையில் ஆழமான ஆராய்ச்சி முறைகளையும், செயல்பாட்டு முறைகளையும் ஏற்படுத்துவதற்காகவே இந்த படிப்பு ஆரம்பிக்கப்பட்டது. இந்த படிப்பில் 4 செமஸ்டர்கள்(Semester) உள்ளன.

செயல்பாட்டு வடிவமைப்பு, மெட்டீரியல் பண்புவகைப்படுத்தல்(characterisation) தொழில்நுட்பம், பொறியாளர்களுக்கான அறிவியல், மெட்டீரியல் வளங்களை மறு-சுழற்சி(recycle) செய்தல், பொறியியல் பகுப்பாய்வின் அடிப்படைகள், ஆற்றல் & சூழல், மேம்பட்ட பிரித்தெடுக்கும் முறைகள், ஆய்வுமுறை உள்ளிட்ட பல்வேறான முக்கிய துறைகளில் இந்த படிப்பின்மூலம் பயிற்சியளிக்கப்படுகிறது.

சேர்க்கை முறைகள்:

இதில் அனைத்து நடைமுறைகளும் CSIR விதிகளின்படியே நடைபெறும். எனவே விவரம் அறிய http://www.csir.res.in/ என்ற வலை தளத்திற்கு சென்று காணவும். தேர்வு செய்யப்படுபவர்கள், "Scientist Trainee" என்று வகைப்படுத்தப்படுவார்கள்.

இப்படிப்பில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு மாதாமாதம் ரூ.25000 உதவித்தொகை 2 வருடங்களுக்கு வழங்கப்படும்.௦௦௦

பொறியியல் படிப்புகளில் ஏதாவது ஒரு பிரிவில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் அல்லது கேட் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தகுதிகளின்படி தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். SC/ST/OBC மாணவர்களுக்கான ஒதுக்கீடு அரசு விதிகளின்படி நடைபெறும்.

பி.எச்டி. ஆராய்ச்சி படிப்பு:

.எம்.எம்.டி. தனது ஜூனியர் விஞ்ஞானிகள், ஆராய்ச்சி நிபுணர்கள் போன்றவர்களுக்கு இந்த வாய்ப்பை வழங்குகிறது. ஆய்வு செய்வதற்கான ஒரு வலுவான அடித்தளத்தை .எம்.எம்.டி. கொண்டுள்ளது என்பதிலும், இத்தகைய ஆய்வுகள் அந்நிறுவனத்தின் சொந்த ஆய்வு நோக்கங்களை நிறைவு செய்கிறது என்பதிலும் சந்தேகமில்லை. இந்நிறுவனத்திலுள்ள பல ஆராய்ச்சியாளர்கள் மூத்த விஞ்ஞானிகள் என்பதாலும், அங்கே JRF/SRF நிலையிலான ஆய்வாளர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவு என்பதாலும், ஆராய்ச்சி நிபுணர்களை அதிகரிக்க வேண்டிய தேவை இந்த நிறுவனத்திற்கு உள்ளது. இதன்பொருட்டு வேறு சில முக்கிய கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை .எம்.எம்.டி. செய்துள்ளது.

சேர்க்கை:

ஒவ்வொரு காலகட்டத்திலும் நிறுவனங்கள்/தனிமனிதர்களிடமிருந்து முழு பயோடேட்டாவுடன் தன்னார்வ முறையில் வரும் விண்ணப்பங்கள்/கோரிக்கைகள் ஆகியவற்றை .எம்.எம்.டி. பரிசீலிக்கிறது. டாக்டோரல் பரிசீலனை கமிட்டியின்(DSC) பரிந்துரைகளின் அடிப்படையில், HRD Cell மூலமாக, நிறுவன இயக்குனர், ஆய்வுக்கான பட்டதாரிகளை தேர்ந்தெடுக்கிறார்.

பி.எச்டி. ஆய்வாளருக்கான தகுதி & ஆய்வு தலைப்பு:

ஆய்வு தலைப்பானது, .எம்.எம்.டி. விஞ்ஞானிகளின் அறிவுக்குட்பட்ட பகுதியாக இருக்க வேண்டும் மற்றும் அந்நிறுவனத்தின் ஆய்வுக்குட்பட்ட பகுதியாக இருக்க வேண்டும். ஆய்வுக்கு விண்ணப்பிக்கும் நபர், எந்த பல்கலைக்கழகத்தில் ஆய்வானது பதிவு செய்யப்படுமோ, அந்த நிறுவனம் வகுத்துள்ள தகுதி எல்லையை அடைந்திருக்க வேண்டும். பொதுவில், பி.எச்டி. மேற்கொள்பவர், தனது ஆய்வு சம்பந்தப்பட்ட துறைக்குள் சிறிது கல்வி/ஆய்வு அனுபவத்தை வைத்திருக்க வேண்டும்.

வழிகாட்டி(Guide):

* .எம்.எம்.டி. -இன் விஞ்ஞானி வழிகாட்டியாக இருப்பார். அந்த வழிகாட்டியும், பி.எச்டி. செய்பவரும் இணைந்து பதிவு செய்யும் பல்கலைக்கழகத்தை தேர்ந்தெடுப்பார்கள்.

* ஆய்வின் சூழலைப் பொறுத்து துணை-வழிகாட்டி தேர்ந்தெடுக்கப்படுவார்.

பி.எச்டி. ஆய்வைப் பற்றி மேலும் விவரம் அறிய www.immt.res.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

கோடைகால பயிற்சி வகுப்புகள்:

இத்தகைய முக்கிய படிப்புகள் தவிர, கோடைகால பயிற்சி வகுப்புகளும் .எம்.எம்.டி -இல் நடத்தப்படுகின்றன. இந்த பயிற்சி வகுப்புகள் பற்றிய தெளிவான விவரங்களை அறிய www.immt.res.in என்ற வலைதளத்தில் தேடவும்.

 

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us