அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான வடகிழக்கு நிறுவனம் (என்.இ.ஐ.எஸ்.டி.) | Kalvimalar - News

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான வடகிழக்கு நிறுவனம் (என்.இ.ஐ.எஸ்.டி.) ஜூலை 21,2011,00:00 IST

எழுத்தின் அளவு :

அறிமுகம்  மற்றும் நோக்கம்:

சி.எஸ்..ஆர். அமைப்பின்கீழ் செயல்படும் ரசாயன(கெமிக்கல்) அறிவியல் வகையில் வரும் ஆய்வகங்களில் முக்கியமானது, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான வடகிழக்கு நிறுவனம்(என்...எஸ்.டி.). இந்நிறுவனம் கடந்த 1961 -இல் அஸ்ஸாம் மாநிலம் ஜொர்ஹாத் என்ற நகரில் ஆரம்பிக்கப்பட்டது. இந்தியாவிலுள்ள அபரிமிதமான இயற்கை வளங்களை பயன்படுத்துவதன் மூலம் உள்நாட்டு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது இதன் முக்கிய நோக்கமாகும். ஏனெனில் இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியம் ஏராளமான எண்ணெய், இயற்கை எரிவாயு, தாதுக்கள் மற்றும் டீ போன்ற வளங்களை கொண்டுள்ளது. எனவே இந்நிறுவனத்தின் ஆய்வகங்கள், தொழில்துறை மற்றும் நீட்டிப்பு பணிகளை எவ்வாறு மேம்படுத்துவது என்பது சம்பந்தமான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளன. இந்நிறுவனம் விவசாய தொழில்நுட்பம், உயிரியல் மற்றும் எண்ணெய் வயல் ரசாயனங்கள் ஆகியவற்றில் பலவித ஆய்வுகளை மேம்படுத்தி, அவற்றை வணிக ரீதியாகவும் வெற்றிகரமாக மாற்றியுள்ளது. தேசிய மற்றும் சர்வதேசிய அளவில், அரசு மற்றும் தனியார் துறைகளுக்கு தொழில்நுட்ப மற்றும் அறிவியல் சேவைகளை வழங்கி, ஆராய்ச்சி & மேம்பாட்டு துறையில் மிகப்பெரிய பங்களிப்பை தருவதற்கு இந்நிறுவனம் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது.

இந்நிறுவனத்திலுள்ள துறைகள்:

* பகுப்பாய்வு வேதியியல்

* துணைநிலை சிவில் இன்ஜினீயரிங்

* பயோடெக்னாலஜி

* கெமிக்கல் இன்ஜினீயரிங்

* இன்ஸ்ட்ரூமென்டேஷன்

* நிலக்கரி

* பூகோள அறிவியல்

* பொது இன்ஜினீயரிங்

* மெடிசினல் கெமிஸ்ட்ரி

* மெட்டீரியல் சயின்ஸ்

உள்ளிட்ட ஏராளமான துறைகள் உள்ளன.

பணி வாய்ப்புகள்:

இந்நிறுவனத்தில் பல நிலைகளில் விஞ்ஞானி பணி வாய்ப்புகள் உள்ளன. இதைத்தவிர, டெக்னீஷியன், நூலக உதவியாளர், கார்பெண்டர், ஹெல்பர், திட்ட உதவியாளர், ப்ளம்பர், எலக்ட்ரீஷியன் உள்ளிட்ட ஏராளமான பணி நிலைகள் பலவிதமான சம்பள வகைகளோடு உள்ளன. இதற்கான விரிவான தகுதி நிலைகளும் உள்ளன. இவற்றைப் பற்றிய விரிவான தகவலுக்கு www.rrljorhat.res.in என்ற வலைதளத்திற்கு செல்லவும்.

மேலும் ஜே.ஆர்.எப். முடித்த நபர்களுக்கும் இங்கே பல நல்ல வாய்ப்புகள் உள்ளன.

மாணவர்களுக்கான பயிற்சிகள்:

இந்நிறுவனத்தில் 3 மாதகாலம் மற்றும் 1 வருட காலத்திற்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன.

3 மாதகால பயிற்சி வகுப்பு - முதுநிலை படிப்பில் பயோஇன்பெர்மடிக்ஸ் அல்லது பயோடெக்னாலஜி/பயோஇன்பெர்மடிக்ஸ் அறிவுடன் லைப் சயின்ஸ் படிப்பில் ஏதாவது ஒரு பிரிவை படிக்கும் மாணவர்கள் இந்த பயிற்சிக்கு தகுதி பெற்றவர்கள்.

1 வருடகால பயிற்சி வகுப்பு - முதுநிலை பயோஇன்பெர்மடிக்ஸ் படிப்பில் முதல்வகுப்பு மதிப்பெண் அல்லது முதுநிலை பயோடெக்னாலஜி படிப்பில் முதல்வகுப்பு மதிப்பெண்/பயோஇன்பெர்மடிக்ஸ் டிப்ளமோவுடன் லைப் சயின்ஸ் படிப்பில் ஏதாவது ஒரு பிரிவை படித்த மாணவர்கள் இந்த பயிற்சிக்கு தகுதி பெற்றவர்கள்.

இந்த பயிற்சி வகுப்புகளை பற்றி நன்கு விவரம் அறிய www.rrljorhat.res.in என்ற இணையதளத்தை அணுகவும்.

நூலகம்:

இந்நிறுவன நூலகத்தில் பலவகையிலான 24,500 புத்தகங்கள் உள்ளன. இவைதவிர, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான ஜர்னல்கள், இந்திய காப்புரிமைகள், ஆய்வுகள், அறிக்கைகள் போன்ற பலவகையிலான சேகரிப்புகள் இருக்கின்றன. இந்நிறுவனம் சார்ந்த ஆய்வாளர்களுக்கு இந்த நூலகம் பெரிய பொக்கிஷமாக இருக்கிறது.

 

 

 

 

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us