பிரிண்டிங் டெக்னாலஜி படிப்பை எங்கு படிக்கலாம்? | Kalvimalar - News

பிரிண்டிங் டெக்னாலஜி படிப்பை எங்கு படிக்கலாம்? செப்டம்பர் 04,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

பிரிண்டிங் டெக்னாலஜி படிப்பில் பி.இ., பி.டெக்., பட்டப்படிப்பு, டிப்ளமோ என பல்வேறு நிலைகளில் படிப்புகள் தரப்படுகின்றன. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ.,/பி.டெக்., படிப்பானது தரப்படுகிறது. கவுன்சலிங் மூலமாக இதில் சேரலாம். பிளஸ் 2ல் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் படித்திருக்க வேண்டும்.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள பி.எம்.எஸ். காலேஜ் ஆப் இன்ஜினியரிங் என்னும் கல்வி நிறுவனத்தில் இதில் பட்டப்படிப்பு 3 ஆண்டுப் படிப்பாகத் தரப்படுகிறது. பிளஸ் 2 தகுதி. கோயம்புத்தூரில் உள்ள அவினாசிலிங்கம் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பட்டப்படிப்பு நடத்தப்படுகிறது. இதில் பெண்கள் மட்டுமே சேர முடியும்.

பிளஸ் 2 தகுதி. சிவகாசியிலுள்ள சிவகாசி இன்ஸ்டிடியூட் ஆப் பிரிண்டிங் டெக்னாலஜி நிறுவனத்தில் டிப்ளமோ படிப்பு நடத்தப்படுகிறது. 10ம் வகுப்பு/பிளஸ் 2 தகுதியுடையவர் இதில் சேரலாம். சென்னை அடையாரிலுள்ள சதர்ன் ரீஜனல் இன்ஸ்டிடியூட் ஆப் பிரிண்டிங் டெக்னாலஜி நிறுவனத்திலும் டிப்ளமோ படிப்பே நடத்தப்படுகிறது. 10ம் வகுப்பு, பிளஸ் 2 தகுதியுடையவர் சேரலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us