கோயம்புத்தூர், பெங்களூரு போன்ற இடங்களில் இயங்கி வரும் அம்ரிதா கல்வி நிறுவனங்களில் ஒன்றில் எனது மகனை எம்.பி.ஏ.,வில் சேர்க்க விரும்புகிறேன். இது சரியான முடிவு தானா? | Kalvimalar - News

கோயம்புத்தூர், பெங்களூரு போன்ற இடங்களில் இயங்கி வரும் அம்ரிதா கல்வி நிறுவனங்களில் ஒன்றில் எனது மகனை எம்.பி.ஏ.,வில் சேர்க்க விரும்புகிறேன். இது சரியான முடிவு தானா? அக்டோபர் 18,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

அம்ரிதா கல்வி நிறுவனங்கள் இன்று நமது மாணவர்களுக்கும் அவரது பெற்றோருக்கும் வெகு பரிச்சயமான பெயராக விளங்குகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் எழில்மிகு சூழலில் இது அமைந்துள்ளது. 400 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்தப் படிப்பில் சேரும் மாணவர்கள் இந்தப் படிப்பில் ஒரு செமஸ்டரை மட்டும் வெளிநாட்டில் படிக்கும் அம்சம் குறிப்பிடத்தக்கது. ஸாப் (SAP) பின் முழு நேர ஆசிரியர்கள் இங்கு பாடம் நடத்துகிறார்கள்.

சார்க் நாடுகளின் மாணவர்களும் இதில் சேரலாம். பெர்க்லி, கார்னல், டெக்சாஸ்ஆஸ்டின், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். ஆகிய உலகப் புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களில் படித்து சிறப்புப் பயிற்சி பெற்ற தரமான ஆசிரியர்கள் இதை நடத்தவுள்ளனர். கான்பூர் ஐ.ஐ.டி., எக்ஸ்.எல்.ஆர்.ஐ., திருவனந்தபுரம் ஐ.ஐ.டி. ஆகியவற்றோடு இந்த நிறுவனம் ஒப்பந்தங்களை செய்து கொண்டுள்ளது. பைனான்ஸ், மார்க்கெட்டிங், உறியூமன் ரிசோர்சஸ், ஆபரேஷன்ஸ் மற்றும் சிஸ்டம்ஸ் பிரிவுகளில் இதில் சிறப்புப்படிப்புப் பிரிவுகள் உள்ளன. 2 சிறப்புப் பிரிவுகளை இணைத்தும் படிக்கலாம். 

தகுதி: 10ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு ஆகியவற்றில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் தகுதி பெற்றிருக்க வேண்டும். ஐ.ஐ.எம். படிப்புகளுக்காக நடத்தப்படும் கேட் தேர்வில் பெறும் மதிப்பெண்களும் அம்ரிதா பிசினஸ் ஸ்கூல் தேர்விலும் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் இப் படிப்பில் சேரலாம். இந்த நுழைவுத் தேர்வானது எட்டிமடை, மும்பை, ஐதராபாத், கோல்கட்டா, புதுடில்லி, சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் நடத்தப்படும்.

வெளிநாடுகளிலிருந்து இந்தப் படிப்பில் சேர விரும்புவோர் ஜிமேட் தேர்வில் பெறும் மதிப்பெண்களைக் கொண்டு சேரலாம். இப்படிப்புக்கான விண்ணப்பங்கள் பொதுவாக செப்டம்பர் 1 முதல் கிடைக்கின்றன. இதைப் பெற விளம்பரத்தில் குறிப்பிடும் தொகைக்கு டி.டி., எடுத்து அம்ரிதா விஸ்வ வித்யா பீடம் என்ற பெயரில் கோயம்புத்தூரில் மாற்றத்தக்கதாக அனுப்பிப் பெறலாம்.

விண்ணப்பத்தை www.amrita.edu/asb  தளத்திலிருந்து டவுண்லோட் செய்தும் கொள்ளலாம். நிரப்பி அனுப்பும் போது விண்ணப்பக் கட்டணத்தை டிடியாக மேலே கூறியபடி அனுப்ப வேண்டும். இவை கேட் பயிற்சி மையங்களான ஐ.எம். எஸ். மற்றும் டைம் ஆகியவற்றிலும் கிடைக்கின்றன. அவற்றில் நேரடியாக இதைப் பெறலாம்.

பிற விபரங்கள் பெறும் முகவரி:
Professor Easwar Krishna Iyer
Chairperson  Admissions,
Amrita School of Business,
Ettimadai, Coimbatore 641 105.

இமெயில் முகவரி: k_easwar@ettimadai.amrita.edu

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us