தமிழ் பல்கலைக்கழகம் | Kalvimalar - News

தமிழ் பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

தமிழ்பல்கலைக்கழகத்தின் வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு தொலைநிலைக் கல்வி இயக்ககம் 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது.  உயர்தரக் கல்வியை உலகிற்குப் பகிர்ந்து அளித்தல், தமிழர்தம் மரபு வழி சார்ந்த அறிவியல், தொழில்நுட்ப, மொழி, இலக்கண, வரலாறு போன்ற நிலைப்பாடுகளின் செவ்வியல் பண்புகளை உலகறிய செய்தல் போன்றவை தொலைநிலைக் கல்வி இயக்ககத்தின் குறிக்கோள்களாக அமைந்துள்ளன

தமிழ் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி இயக்கக வாயிலாக நடத்தபெறும் அனைத்துப் பாடபிரிவுகளுக்கும் தொலைநிலைக் கல்வி கவுன்சிலிடம் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.

கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் தொலைநிலைக்கல்வி இயக்ககம் மூலம் ஒரே நேரத்தில் இரண்டு படிப்புகளை படிக்கலாம்.

இளநிலை படிப்புகள்:
பி.ஏ., தமிழ்
பி.ஏ., வரலாறு
பி.ஏ., வணிகவியல்
பி.ஏ., தமிழ் இலக்கியம்
பி.ஏ., தமிழிசை
பி.எட்.,

முதுநிலை படிப்புகள்:
எம்.ஏ.,தமிழ்
எம்.ஏ., வரலாறு
எம்.ஏ., வணிகவியல்
எம்.ஏ., புவியியல்
எம்.ஏ., யோகாவும் மனித மாண்பும்

தொழில்முறைப் படிப்புகள்:
எம்.பி.ஏ.,
பி.பி.ஏ.,
பி.சி.ஏ.,

டிப்ளமோ படிப்புகள்:
இசை ஆசிரியர் பயிற்சி
யோகா ஆசிரியர் பயிற்சி
பரதநாட்டிய ஆசிரியர் பயிற்சி
பரதநாட்டியம்
சைவ சித்தாந்தம்
கணிப்பொறி பயன்பாட்டியல்
பயன்பாட்டு ஆங்கிலம்
மூலிகை அறிவியல்
பிழையில்லாத் தமிழ்ப் பயிற்சி,
மருத்துவ மூலிகை அழகுக் கலை
மணியியல்
தொழிலாளர் நலச்சட்டம்

முதுநிலை டிப்ளமோ படிப்புகள்:
பி.ஜி.டி.சி.ஏ.,

சான்றிதழ் படிப்புகள்:
இசை
பரதநாட்டியம்
நூலகம் மற்றும் தகவல் அறிவியல்
தமிழ்ப் புலவர் பயிற்சி
அருங்காட்சியகவியல்
கோயிற் கட்டடக் கலை வரைவியல்,
நுகர்வோர் கல்வி
மனித உரிமை கல்வி
தாள நுட்பவியல்
மொழிபெயர்ப்பியல்

லேட்ரல் என்ட்ரி
பி.சி.ஏ.,

தொடர்பு கொள்ள:
இயக்குனர்
தொலைநிலைக் கல்வி இயக்ககம்
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தஞ்சாவூர் 613 010
போன்: 04362-226720
வெப்சைட்: www.tamiluniversity.ac.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us