பெற்றோரே... குழந்தைகளை கவனியுங்க... | Kalvimalar - News

பெற்றோரே... குழந்தைகளை கவனியுங்க...

எழுத்தின் அளவு :

இப்போதிருக்கும் குழந்தைகள் பள்ளி விட்டால் வீடு, வீடு விட்டால் பள்ளி என்று வாழ்கின்றனர். விடுமுறை நாட்களில் கம்யூட்டர் முன்பும், டிவி முன்பும், தவம் கிடக்கின்றனர். தெருவில் இறங்கி விளையாடிய காலம் போய், கம்யூட்டர் கேம்ஸ் விளையாடி, இளவயதிலேயே பார்வை குறைபாடு அடைதல், அதிகப்படியான உடல் எடை என அல்லல்படுகின்றனர்.

பெற்றோரும் மனம் வெதும்பி, என்ன செய்வது என தெரியாமல் விழிக்கின்றனர். பெற்றோர், குழந்தைகளுக்கு துணை நின்றால் இதிலிருந்து மீள முடியும்.

இதற்கு பெற்றோர் செய்ய வேண்டியது

* குழந்தைகளுக்கு முன் மாதிரியாய் இருந்து, ஊக்குவிக்க வேண்டும்.
* கவலைக்கும், உடல், மனச் சோர்வுக்கும் தீர்வு, உடற்பயிற்சி தான் என்பதை எடுத்துரைக்க வேண்டும்.
* பிள்ளைகள் உடற்பயிற்சி செய்யும் போது, பெற்றோரும் அவர்களுடன் இணைந்து, எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
* பூங்காக்களில் குழந்தைகளுடன், எளிய நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். இது குழந்தைகளுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும்.
* குழந்தைகளை வீட்டிற்குள் அடைத்து வைக்க வேண்டாம். வெளியில் சென்று விளையாட அனுமதிக்க வேண்டும்.
* படிக்க, விளையாட, டிவி பார்க்க என தனித்தனியே நேரம் ஒதுக்கி, அதற்கான அட்டவணை தயாரித்து பின்பற்ற வைக்க வேண்டும்.
* சரியான கலோரி அளவுகளில், ஆரோக்கியமான உணவுகளை தயார் செய்து தர வேண்டும். ‘ஜங்க் புட்’களை தவிர்க்க வேண்டும்.
* ‘டயட்’ இருப்பதன் நன்மைகளை எடுத்துக் கூறி பின்பற்ற வைக்க வேண்டும்.
* அனைத்தையும், ஒரே நாளில் நடைமுறைப்படுத்தாமல், சிறிது சிறிதாக பழக்க வழக்கத்திற்கு கொண்டு வர வேண்டும்.
* உடல் எடை அதிகரிக்கவும், இளைக்கவும் மருத்துவ ரீதியான முயற்சிகளில் இறங்க வேண்டாம்.
இதை குழந்தைகள் பின்பற்றினால், மூளையும் மனதும் புத்துணர்வு பெற்று, படிப்பில் அதிக அக்கறையுடன் ஈடுபாடு காட்டுவர்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us