கனடா கல்வி நிறுவனங்கள் எவை? எனது உறவினர் அங்கிருப்பதால் அங்கு படிக்க விரும்புகிறேன். | Kalvimalar - News

கனடா கல்வி நிறுவனங்கள் எவை? எனது உறவினர் அங்கிருப்பதால் அங்கு படிக்க விரும்புகிறேன். டிசம்பர் 28,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

சிறந்த கல்வி முறை, அதிக அளவிலான சுகாதாரச் சூழல், குறைந்த அளவிலான குற்றங்கள் மற்றும் தூய்மையான சூழல் ஆகிய காரணங்களால் பலராலும் விரும்பப்படும் நாடாக கனடா விளங்குகிறது. கனடாவில் பள்ளிக் கல்வி வரை இலவசம் தான். கல்வி நிறுவனங்ள் அரசுத் துறையிலும் தனியார் துறையிலும் உள்ளன.

கனடா கல்வி நிறுவனங்கள்
கனடாவின் கல்விச் சூழலில் பல்கலைகழகங்கள், பல்கலைக்கழக கல்லூரிகள், சமூகக் கல்லூரிகள், வேலைகளுக்கான சிறப்பு கல்வி நிறுவனங்கள் மற்றும் மொழிப் பள்ளிகள் ஆகியவை இயங்கி வருகின்றன. இவற்றில் சேர அடிப்படைத் தகுதியாக டோபல் தேர்ச்சி தேவைப்படுகிறது.

பொதுவான கல்வித் தகுதிகள்
* இளங்கலை படிப்புகளில் சேர பிளஸ் 2வில் குறைந்த பட்சம் 70% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தொழில் மற்றும் கம்ப்யூட்டர் படிப்புகளுக்கு பிளஸ் 2 வரை கணிதத்தைப் படித்திருக்க வேண்டும்.
* பட்ட மேற்படிப்புகளில் 4 ஆண்டுகள்
பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். இதிலும் குறைந்தது 70% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஜி.ஆர்.இ., தேர்வில் தகுதி பெற்றிருப்பதும் அவசியம். * பி.எச்டி., ஆய்வுப் படிப்புகளில் சேர பட்டமேற்படிப்பு முடித்திருப்பதும் ஜி.ஆர்.இ., தகுதி பெற்றிருப்பதும் ஏற்கனவே ஆய்வோடு
தொடர்புடைய படைப்புகளையும் சேர விரும்பும் பல்கலைகழகத்தில் தர வேண்டும்.

கனடா பட்டப்படிப்புக்கு இவை தான் தேவை
* கனடா பள்ளித் தேர்வுக்கு இணையான கல்வித் தகுதி
* ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு மொழியில் சிறப்புத் திறன்
* சிறந்த பரிந்துரை கடிதங்கள்
* ஜி.மேட் அல்லது ஜி.ஆர்.இயில் அதிக மதிப்பெண்

பொறியியல் படிப்புக்கான தேவை
* கனடா பொறியியல் படிப்புகள் 4 ஆண்டு கால அளவைக் கொண்டவை
* இதில் சேர தகுதி தரும் படிப்பில் 80% அல்லது ஏ கிரேடு பெற்றிருக்க வேண்டும்
* குறிப்பாக கணிதம் மற்றும் ஆங்கிலத்தில் சிறந்த மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும்
* டோபல் தேர்வில் 225 முதல் 250 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். டோபலுக்கு பதிலாக சில கல்வி நிறுவனங்கள் ஐ.இ.எல்.டி.எஸ். தேர்வு தகுதியை ஏற்றுக் கொள்கின்றன.

எம்.பி.ஏ., படிப்பில் சேர தேவை
* கனடா எம்.பி.ஏ.,வை முழு நேர நேரடி கல்வியாகவும், பகுதி நேர கல்வியாகவும், தொலைதூர கல்வியாகவும் குறுகிய கால
கல்வியாகவும் படிக்கலாம்.
* கல்வித் தகுதியில் குறைந்தது 70% பெற்றிருக்க வேண்டும்.
* ஜிமேட் தேர்வில் 500 முதல் 600க்குள் பெற்றிருக்க வேண்டும்
* டோபல் தேர்வில் 225 முதல் 300 பெற்று தேர்ச்சி அல்லது இதற்கு சமமான ஐ.இ.எல்.டி.எஸ். தகுதி.
* விண்ணப்பிப்பவரின் தனித் திறன்,ஆளுமைத் திறன், கடந்த கால சிறப்புச் சாதனைகள் மற்றும் கல்வித் திறன் ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

சட்டம், மருத்துவம், பல் மருத்துவம் சேர
* கல்வித் தகுதியில் குறைந்தது 75%பெற்றிருக்க வேண்டும்.
* சம்பந்தப்பட்ட பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
* நுழைவுத் தேர்விலும் தகுதி பெற வேண்டும்.

கனடாவின் சிறந்த பல்கலைக்கழகங்கள்
* வாட்டர்லூ பல்கலைக்கழகம்
* டொரண்டோ பல்கலைக்கழகம்
* மெக்கில் பல்கலைக்கழகம்
* சைமன் பிரேசர் பல்கலைக்கழகம்
* கார்லடன் பல்கலைக்கழகம்
* மாண்ட்ரீல் பல்கலைக்கழகம்
* குவீன்ஸ் பல்கலைக்கழகம்
* பிரிட்டிஸ் கொலம்பியா பல்கலைக்கழகம்
* கன்கார்டியா பல்கலைக்கழகம்
* ஆல்பர்டா பல்கலைக்கழகம்

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us