காதலுக்காக நடுத்தெருவில் நிற்க வேண்டுமா? | Kalvimalar - News

காதலுக்காக நடுத்தெருவில் நிற்க வேண்டுமா?

எழுத்தின் அளவு :

மாணவர்கள் படிக்கும் வயதில் காதலில் ஈடுபட்டு, வாழ்க்கையை தொலைக்க வேண்டாம் என்று புதுச்சேரியில் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் கல்வியாளர் ரமேஷ் பிரபா பேசினார்.

கல்வியாளர் ரமேஷ் பிரபா பேசுகையில், "மாணவர்களை இன்று அதிகளவில் ஆட்டிப் படைக்கும் விஷயம், காதல். தற்போது, 98 சதவீத திரைப்படங்கள் காதலை மையமாக வைத்துதான் வருகின்றன. சினிமாக்கள், இளைஞர்களிடம் காதலைத் தூண்டும் வகையில் உள்ளன.

காதலுக்காக, குடும்பத்திற்கு எதிராக தூண்டிவிடுகிறது. குடும்பத்தை விட்டு வெளியில் வந்தால், நடுத்தெருவில்தான் நிற்க வேண்டும். இந்த வயதில் வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்ய முடியாது. இவ்வயது காதல், தோற்றம் சார்ந்தது. அறிவு, உணர்ச்சி ஆகிய இரண்டையும் சரியாக பாவிப்பவர்கள் நல்ல நிலையில் இருப்பர்.

பிளஸ் 2 பருவத்தில் உணர்ச்சி மேலோங்கும். காதலால் கவனச் சிதறல் அதிகமாகிறது. தனிமையில் இருக்கும்போது, தவறான சிந்தனைகள் வரும். அப்போது, குடும்பத்தைப் பற்றி நினைத்தால், அச்சிந்தனை போய்விடும். நல்ல நண்பர்களுடன், குடும்பத்தாருடன் நேரத்தை செலவிடுங்கள்" என குறிப்பிட்டார்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us