பி.பார்ம்., படிப்பில் சேரவுள்ளேன். இந்தப் படிப்பை முடிப்பவருக்கு இன்றைய கால கட்டத்தில் வாய்ப்புகள் எப்படி? | Kalvimalar - News

பி.பார்ம்., படிப்பில் சேரவுள்ளேன். இந்தப் படிப்பை முடிப்பவருக்கு இன்றைய கால கட்டத்தில் வாய்ப்புகள் எப்படி? பிப்ரவரி 01,2011,00:00 IST

எழுத்தின் அளவு :

4 ஆண்டுகள் இந்தப் படிப்பை படிக்க உள்ளீர்கள். டிரக் மனுபாக்சரிங் நிறுவனங்கள் எனப்படும் மருந்து தயாரிப்பகங்களில் உங்களுக்கு வாய்ப்புகள் கட்டாயம் உள்ளன. தவிர உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு மையங்களிலும் வாய்ப்புகளைப் பெறலாம்.

இந்தப் படிப்பில் எந்தத் துறையில் சிறப்புப் படிப்பு படிக்க உள்ளீர்கள் என்பதைப் பொறுத்தும் வாய்ப்புகள் கிடைத்திடும். பார்மாகாலஜி, பார்மாசூட்டிக்ஸ், ஹாஸ்பிடல் பார்மசி, குவாலிடி அஸ்யூரன்ஸ் ஆகியவற்றில் வாய்ப்புகள் உள்ளன. பொதுவாகவே இந்தப் படிப்பு படித்து முடிப்பவர்களுக்கு நல்ல தேவை உள்ளது.

ஆசிரியப் பணி, பார்மசிஸ்ட், மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்சனிஸ்ட், குவாலிடி மேனேஜர், அனலிடிகல் கெமிஸ்ட், சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் மேனேஜர், டேட்டா மேனேஜர், டிரக் ரெகுலேட்டரி மேனேஜர், சயின்டிஸ்ட், ஹெல்த்கேர் புரபசனல், ரீடெயிலர் போன்ற வாய்ப்புகளையும் பெறலாம்.

அரசுத் துறையில் டிரக் அனலிஸ்ட், டிரக் இன்ஸ்பெக்டர் போன்ற பணிகளை இத் துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் பெறலாம். ஆசிரியப் பணியில் சேர பட்ட மேற்படிப்பு முடிப்பது முக்கியம். இத் துறையில் ஆய்வுப் பிரிவில் பணி வாய்ப்புகள் இந்தியாவில் குறைவு.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us