எனது பெயர் மணிமாறன். நெதர்லாந்து நாட்டின் த ஹேக் நகரிலிருக்கும் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்ற என்னென்ன தகுதிகள் வேண்டும்? | Kalvimalar - News

எனது பெயர் மணிமாறன். நெதர்லாந்து நாட்டின் த ஹேக் நகரிலிருக்கும் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்ற என்னென்ன தகுதிகள் வேண்டும்?ஜூன் 26,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றுவது என்பது அனுபவமும், புகழும் சார்ந்த விஷயம். அதேசமயம், அடிப்படை சட்டப் படிப்புடன் சேர்ந்து,  சர்வதேச சட்டப் படிப்பும் படிப்பது அவசியம். பிரிட்டனில், LLM in International Law என்ற 1வருட படிப்பு உள்ளது. சர்வதேச அளவில் கோலோச்ச விரும்புபவர்கள், சர்வதேச சட்டத்தில் பட்டம் பெற்றிருப்பது ஒரு பொதுவான தகுதி நிலை.

மேலும், சர்வதேச நீதிமன்றத்தில் கோடைகால இன்டர்ன்ஷிப் திட்டங்களும் உண்டு. இவற்றில் பங்கேற்பதும் அவசியம். சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்ற, கல்வித் தகுதி என்பது ஒரு அடிப்படைதான். ஆனால், பெரியளவில் ஆள் பழக்கமும், உங்களது பணி அனுபவங்களில் நீங்கள் பெற்ற புகழுமே முக்கியப் பங்காற்றும்.

இதைத்தவிர, சர்வதேச நீதிமன்றத்தில் நீதிபதியாக வேண்டுமென்றாலும், முக்கிய நபர்களின் ஆதரவும், அனைத்திற்கும் மேலாக அரசின் ஆதரவும் வேண்டும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us