மனித உரிமைகள் பற்றிய நல்ல படிப்பை எங்கு படிக்கலாம்? | Kalvimalar - News

மனித உரிமைகள் பற்றிய நல்ல படிப்பை எங்கு படிக்கலாம்? மார்ச் 02,2011,00:00 IST

எழுத்தின் அளவு :

கடந்த பல ஆண்டுகளாகவே உலகெங்கும் மனித உரிமைகள் என்பது வெகு பரவலாக அறியப்படுவதாக மாறியிருக்கிறது. வேகமாக வளரும் பொருளாதாரச் சூழல் ஒரு புறம் என்றால் மறுபுறம் மனித உரிமை மீறல்கள் என்பது சாதாரணமான நிகழ்வாகக் காணப்படுகிறது. எனவே மனித உரிமைகள் என்பது வேகமாக வளர்ந்து வரும் கல்விப் பிரிவாகவும் மாறியுள்ளது.

இப் பிரிவு படிப்புகளை முடிப்பவர் நல்ல பணி வாய்ப்புகளைப் பெற முடிகிறது. வெறும் தகுதிகளைத் தாண்டி சிறப்பான தகவல் தொடர்புத் திறன் மற்றும் மேம்பட்ட பொது அறிவைப் பெற்றிருப்போர் இத் துறையில் சிறப்பான சம்பளத்தையும் எதிர்காலத்தையும் பெறுகிறார்கள். எனவே மனித உரிமைகள் தொடர்பான படிப்புகளுக்கு பெரிய வரவேற்பு இருப்பதில் சந்தேகமில்லை.

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹியூமன் ரைட்ஸ் என்னும் சிறப்பு நிறுவனம் தொலை தூரக் கல்வி முறையில் இப் பிரிவில் 2 ஆண்டு பட்ட மேற்படிப்பைத் தருகிறது.  பட்டப்படிப்பு தகுதி பெற்றிருக்கும் எவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹியூமன் ரைட்ஸ் என்ற பெயரில் புதுடில்லியில் மாற்றத்தக்க டிடியை எடுத்து அனுப்பி இதற்கான விண்ணப்பம் பெறலாம்.

விண்ணப்பம் பெற்றபின் நிரப்பி, 4 பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களுடனும் அனைத்து சான்றிதழ்களின் அட்டெஸ்டட்நகல்களுடனும் கட்டணத்திற்கான டிடியை மேற்கண்டவாறே எடுத்து அனுப்ப வேண்டும். இது பற்றிய பிற விபரங்களை அறிய இணைய தள முகவரி: http://www.rightsedu.net  இப்படிப்புக்கான தேர்வுகள் தமிழ்நாட்டில் சென்னையில் மட்டுமே நடத்தப்படும். நமக்கு அண்மையில் பெங்களூரு மற்றும் திருவனந்த புரம் ஆகிய இடங்களிலும் இது நடத்தப்படும்.

விண்ணப்பம் பெறும் முகவரி
Indian Institute of Human Rights,
A16, Paryavaran Complex, (HT),
Saket Maidangarhi Marg, New Delhi – 110 030.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us