வேளாண் விரிவாக்க மேலாண்மைக்கான தேசிய நிறுவனம் | Kalvimalar - News

வேளாண் விரிவாக்க மேலாண்மைக்கான தேசிய நிறுவனம்பிப்ரவரி 23,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

வேளாண்மை விரிவாக்கத்தை மேலாண்மை செய்வதற்காக, மத்திய வேளாண் அமைச்சகத்தால், கடந்த 1987ம் ஆண்டு, ஐதராபாத்தில் ஏற்படுத்தப்பட்ட தேசிய மையம்தான் MANAGE. இதுவொரு தன்னாட்சி அமைப்பு. இந்த மையத்தின் முக்கியத்துவம் மற்றும் செயல்பாட்டு விரிவாக்கம் கருதி, கடந்த 1992ம் ஆண்டு, தேசிய நிறுவனமாக உயர்த்தப்பட்டு, வேளாண் விரிவாக்க மேலாண்மைக்கான தேசிய நிறுவனம் என்று பெயர்பெற்றது.

கீழ்கண்ட 5 துறைகளில் இந்நிறுவனம் தனது சேவையை வழங்குகிறது

* மேலாண்மை பயிற்சி
* ஆலோசனை
* மேலாண்மைக் கல்வி
* ஆராய்ச்சி
* தகவல் சேவை

இந்நிறுவனத்தின் உள்கட்டமைப்பு

இந்நிறுவனத்தின் இடவமைப்பானது, 17 ஹெக்டேர் பரப்பளவில், அழகிய புல்வெளிகளும், பல்வகையான தாவரங்களும் நிறைந்து, கல்வி கற்பதற்கேற்ற ஒரு அழகிய சூழலை உண்டாக்குகிறது.

இந்நிறுவன உள்கட்டமைப்பானது, கல்வி நிலையங்கள், விடுதிகள், விளையாட்டு வசதிகள் மற்றும் வசிப்பிடங்கள் போன்ற பல அம்சங்களை உள்ளடக்கியது. கல்வி நிலையங்கள் என்பவை, வகுப்பறைகள், ஆசிரியர் அறைகள், மாநாட்டு அரங்கங்கள், நூலகம் மற்றும் கணிப்பொறி நிலையம் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கும்.

நூலகம்

MANAGE நூலகமானது, சர்வதேச அளவிலான, வேளாண்மை மற்றும் மேலாண்மை சார்ந்த, பல புத்தகங்களைக் கொண்டது. மேலும், வேளாண்மை மற்றும் அதன் துணைப்பாடங்கள் சார்ந்த ஏராளமான தரவுகளும் உள்ளன. இந்நூலகமானது, 12,000 தலைப்புகளுக்கும் மேலான இந்திய மற்றும் வெளிநாட்டு ஜர்னல்களை கொண்டுள்ளது.

இதுதவிர, தகவல் தொழில்நுட்ப வசதிகள், பதிப்பகங்கள், பொழுதுபோக்கு மற்றும் மருத்துவ சேவை மையங்கள் போன்றவையும் MANAGE வளாகத்தில் உள்ளன.

இந்நிறுவனத்தின் முக்கியப் பணிகள்

* வேளாண் விரிவாக்க மேலாண்மைத் தொடர்பான புகழ்பெற்ற மாநில, பிராந்திய, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான நிறுவனங்களை இணைப்பது.

* வேளாண் விரிவாக்க மேலாண்மை அமைப்ப்புகள் மற்றும் கொள்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளுதல்

* ஆசிரியர்களை மாற்றிக்கொள்ளும் நோக்கில், தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் ஒத்துழைப்பு மேற்கொள்ளல்.

* வேளாண்மை விரிவாக்க அமைப்புகளின் செயல்திறனை மேம்படுத்த, நவீன மேலாண்மை உபகரணங்களின் பயன்பாடுகளை அதிகப்படுத்தல்.

* மூத்த மற்றும் நடுநிலை அளவிலான வேளாண் விரிவாக்க அலுவலர்களுக்கு, தேவைப்படும் பயிற்சிகளை அளித்தல்.

* வேளாண் விரிவாக்க மேலாண்மையின் சிக்கல்கள் தொடர்பான ஆய்வுகளை நடத்துதல்.

* வேளாண் மேலாண்மை தொடர்பான பாடங்கள் குறித்த தகவல்களை சேகரித்தல், சேமித்தல், செயல்படுத்தல் மற்றும் இணைத்தல் ஆகியவற்றில் ஒரு சர்வதேச ஆவணப்படுத்தல் மையமாக செயல்படுதல்.

பயிற்சி திட்டங்கள்

இந்நிறுவனம், பல்வேறான நிலைகளில் பல பயிற்சிகளை பலவிதமான காலகட்டங்களில் வழங்குகிறது. சில முக்கியமான பயிற்சி கருத்தாக்கங்கள்,

* வேளாண் விரிவாக்க மேலாண்மை
* வேளாண் வணிக மேலாண்மை
* மனிதவள மேலாண்மை
* இயற்கை வள மேலாண்மை
* பொதுமக்கள் மீடியா மற்றும் தகவல்தொடர்பு
* வேளாண் விரிவாக்கத்தில், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம்

போன்ற பலவிதமான தலைப்புகளில் பயிற்சிகளை வழங்குகின்றன. இந்தப் பயிற்சிகளைப் பற்றிய விபரங்கள் மற்றும் அவை வழங்கப்பட்ட மற்றும் வழங்கப்படும் காலங்கள் ஆகியவை குறித்து அறிந்துகொள்ள http://www.manage.gov.in/training/trgCalendar.pdf என்ற இணையதளம் செல்க.

இந்நிறுவனம் வழங்கும் படிப்புகள்

இந்த ஆராய்ச்சி நிறுவனம் வழங்கும் கல்வி சேவை மிகவும் முக்கியமானது மற்றும் பயனுள்ளது. மூன்று விதமான முக்கியப் படிப்புகளை இந்நிறுவனம் வழங்குகிறது.

* வேளாண் வணிக மேலாண்மையில், முதுநிலை பட்ட டிப்ளமோ படிப்பு - Post graduate Diploma in Management(Agri Business Management).

இப்படிப்பை பற்றிய அனைத்து விபரங்களையும் விரிவாக அறிந்துகொள்ள http://www.manage.gov.in/pgdm-abm.htm என்ற இணையதளம் செல்லவும்.

* வேளாண் விரிவாக்க மேலாண்மையில் முதுநிலை பட்ட டிப்ளமோ படிப்பு - Post graduate Diploma in Agricultural Extension Management(PGDAEM)

இப்படிப்பை பற்றிய அனைத்து விபரங்களையும் அறிந்துகொள்ள http://www.manage.gov.in/pgdaem/pgdaem.htm என்ற இணையதளம் செல்க.

* உள்ளீட்டு டீலர்களுக்கான வேளாண் விரிவாக்க சேவையில் டிப்ளமோ படிப்பு - Diploma in Agricultural Extension Services for Input Dealers(DAESI)

இப்படிப்பை குறித்த அனைத்து தெளிவான விபரங்களையும் அறிந்துகொள்ள http://www.manage.gov.in/daesi/daesi.htm என்ற இணையதளம் செல்க.

வெளியீடுகள்

இந்நிறுவனத்தின் வெளியீடுகளைப் பற்றி அறிந்துகொள்ள http://www.manage.gov.in/publications.htm என்ற இணையதளம் செல்லவும்.

மற்றபடி, இந்நிறுவனம் குறித்த முழுமையான விபரங்களை அறிந்துகொள்ள http://www.manage.gov.in/default.asp என்ற இணையதளம் செல்க.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us