வேலை வாய்ப்பை உருவாக்கும் புதிய படிப்புகள் | Kalvimalar - News

வேலை வாய்ப்பை உருவாக்கும் புதிய படிப்புகள்

எழுத்தின் அளவு :

வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் புதிய படிப்புகளை பல கல்வி நிலையங்கள் உருவக்கியுள்ளன. அதன் முக்கியத்துவம் உணர்ந்து அவற்றை மாணவர்கள் தேர்வு செய்து பயில வேண்டும் என்று கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி தெரிவித்தார்.

தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் பேசிய ஜெயப்ரகாஷ் காந்தி, புதிய பாடத்திட்டங்களிலும் நல்ல வேலைவாய்ப்பு உள்ளது. பி.டெக்., பவுல்ட்ரி துறை துவக்கப்பட்டுள்ளது. 30 இடங்களுக்கு 32 கம்பெனிகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. அதேபோல், வேளாண் பல்கலை கழகம் இந்தாண்டு செரிகல்சர் துறையை துவக்கியுள்ளது. உலக அளவில் பட்டு நூலுக்கு ஏற்பட்டுள்ள தேவைக்கு, இப்படிப்பு அவசியம். இவ்வாறு, புதிய வேலை வாய்ப்புகளை ஒட்டி பல புதிய பாடத்திட்டங்களும் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

இதை கண்காணித்து, அத்துறைகளை தேர்வு செய்ய வேண்டும். உலக அளவில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில் நான்கு ஆண்டுகளில், 52 நாடுகளில் 5.8 மில்லியன் பேருக்கு, ஐ.டி., துறையில் வேலை வாய்ப்பு காத்திருக்கிறது. டாப் 30 கல்லூரிகளில் சேர, கட்-ஆப் மார்க் ஓ.சி., 187, பி.சி., 185, எம்.பி.சி., 180, எஸ்.சி., 160 இருக்க வேண்டும். 198க்கு மேல் இருந்தால் ஐ.ஐ.டி.,யில் வாய்ப்புள்ளது. ஒரு மதிப்பெண் குறைந்தாலும், ஆயிரக்கணக்கான பேருக்கு பின்னால் இருப்போம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

கட்- ஆப் மார்க் குறைந்தால், 2, 3 லெவல் கல்லூரிகளில் உள்ள சிறந்த துறைகளிலும், ஆர்வமுள்ள துறைகளையும் தேர்வு செய்ய வேண்டும். மெடிக்கல் கட்-ஆப் கடந்தாண்டு ஓ.சி., 197.25, பி.சி., 195.50, எம்.பி.சி.,193.25, எஸ்.சி., 188.50 என இருந்தது. இந்தாண்டு இது கூடும். அதேபோல், ஆறு ஆண்டு படிப்பான பார்மஸி டாக்டர் கோர்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் டாக்டர் பரிசோதனை மட்டுமே மேற்கொள்வார். மருந்து, பார்மஸி டாக்டர்தான் வழங்க வேண்டும். ஒவ்வொரு 10 டாக்டருக்கும், ஒரு பார்மஸி டாக்டர் தேவை என நல்ல வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவில் இது, விரைவில் நடைமுறைக்கு வரும். இவ்வாறு, ஜெயப்பிரகாஷ் காந்தி தெரிவித்தார்.

 

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us