எனது பெயர் ஸ்ரீ அங்கப்பிரதட்சணன். நான் புதுச்சேரியை சேர்ந்தவன். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இளநிலைப் பட்டம் பெற்றுள்ளேன். எனது எம்.டெக். படிப்பில், சூரிய சக்தியுடன் சேர்ந்த புதுப்பிக்கத்தக்க சக்திப் பற்றிய சிறப்புப் படிப்பை மேற்கொள்ளவுள்ளேன். எனவே, அந்தப் படிப்பு பற்றிய ஆலோசனையையும், இந்தியாவில் அந்தப் படிப்பை வழங்கும் நிறுவனங்கள் பற்றியும் கூறவும். | Kalvimalar - News

எனது பெயர் ஸ்ரீ அங்கப்பிரதட்சணன். நான் புதுச்சேரியை சேர்ந்தவன். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இளநிலைப் பட்டம் பெற்றுள்ளேன். எனது எம்.டெக். படிப்பில், சூரிய சக்தியுடன் சேர்ந்த புதுப்பிக்கத்தக்க சக்திப் பற்றிய சிறப்புப் படிப்பை மேற்கொள்ளவுள்ளேன். எனவே, அந்தப் படிப்பு பற்றிய ஆலோசனையையும், இந்தியாவில் அந்தப் படிப்பை வழங்கும் நிறுவனங்கள் பற்றியும் கூறவும்.ஜனவரி 11,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

சூரிய ஒளி, காற்று, மழை, கடல்அலை மற்றும் நிலத்தடிப் பாறையின் வெப்பம் போன்றவை புதுப்பிக்கத்தக்க ஆற்றல்கள் எனப்படுகின்றன. இந்த இயற்கை முறையிலான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலமாகவே, உலகின் 16% ஆற்றல் தேவை நிறைவுசெய்யப்படுகிறது. 10% மரபுரீதியான உயிரினத் திரள்(பயோமாஸ்) மூலமாகப் பெறப்படுகிறது. இந்த முறையிலான ஆற்றல், முக்கியமாக, சூடாக்குதல் செயல்முறைக்கு பயன்படுத்தப்படுகிறது. 3.4% நீர் மின்சாரம் மூலமாகப் பெறப்படுகிறது.

புதிய புத்தாக்க முறையிலான ஆற்றல்(சிறிய நீர்மின்சக்தி, நவீன உயிர்திரள், காற்று, சூரியன், நிலத்தடிப் பாறை மற்றும் நிலத்தடி எரிபொருட்கள்) மூலமாக 3% கிடைக்கிறது. அதேசமயத்தில இந்தத் துறையும் வேகமாக வளர்ந்து வருகிறது. மின்சார உற்பத்தியில் புத்தாக்கத்தின் பங்கு சுமார் 19%. அதில், 16% உலக மின்சக்தி, நீர்மின்சக்தி மூலமும், 3% புதிய புத்தாக்க முறையின் மூலமும் கிடைக்கிறது. மேற்கூறிய இந்த அம்சங்களைப் பார்க்கையில், புத்தாக்க ஆற்றல் துறையில் ஏராளமான வேலை வாய்ப்புகள் இருப்பதை உணரலாம்.

காற்று, நீரடி, உயிரினத் திரள் மற்றும் சூரிய தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தின் காரணமாக, ஆற்றல் அமைப்பில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றங்களைப் பற்றி மாணவர்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும் என்பதை, புத்தாக்க ஆற்றல் துறையின் முதுநிலைப் படிப்பு நோக்கமாக கொண்டுள்ளது. புத்தாக்க ஆற்றல்களை பெறுதல், மாற்றுதல், சேகரித்தல் மற்றும் நிர்வகித்தல் போன்ற செயல்பாடுகளில் ஏற்படும் சவால்களை சமாளிக்கும் திறன்களையும் இந்தப் படிப்பு வழங்குகிறது.

மேலும், இத்துறை தொடர்பான கருத்தாக்கங்கள், பயன்பாடுகள், வடிவமைப்பு, புத்தாக்க ஆற்றல் மாற்றிகளின் மேம்பாடு மற்றும் கையாள்தல், ஆற்றல் சேகரிப்பு மற்றும் தேவை மேலாண்மை அமைப்புகள் ஆகியவை தொடர்பான விஷயங்களைக் கற்பிக்கிறது. மேலும், மாணவர்களுக்கு, கீழ்கண்ட திறன்களை இந்த முதுநிலைப் படிப்பானது வழங்குகிறது;

* இத்துறை தொடர்பான, தனிச்சிறப்பு வாய்ந்த கொள்கை மற்றும் சிறப்பு ஆற்றல், தொழில்நுட்பம் மற்றும் பயிற்சிகள் ஆகியவற்றை மேம்படுத்தல்.

நீங்கள் விரும்பும் படிப்பை, கேட் தேர்வில் உயர்ந்தபட்ச மதிப்பெண்களுடன் தேர்ச்சிபெற்று, ஐஐடி மற்றும் என்ஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us