சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்துள்ளேன். ஆர்க்கிடெக்சர் மற்றும் இன்டீரியர் டிசைனிங் துறையில் மிகுந்த ஆர்வமுடையவன். பி.ஆர்க்., இன்டீரியர் டிசைனிங்கில் எதைப் படிக்கலாம்? | Kalvimalar - News

சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்துள்ளேன். ஆர்க்கிடெக்சர் மற்றும் இன்டீரியர் டிசைனிங் துறையில் மிகுந்த ஆர்வமுடையவன். பி.ஆர்க்., இன்டீரியர் டிசைனிங்கில் எதைப் படிக்கலாம்?ஆகஸ்ட் 09,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

ஏற்கனவே சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்துள்ள நீங்கள் இனி பி.ஆர்க்., படிக்கும் வாய்ப்பு இல்லை. தேவையும் இல்லை. சிவில் இன்ஜினியரிங் தொடர்புடைய கேட் எனப்படும் கம்ப்யூட்டர் எய்டட் டிசைனிங் படிப்பது பலன் தரும். மேலும் இன்டீரியர் டிசைனிங்கில் ஆர்வமுள்ள நீங்கள் இதில் பயிற்சி பெற்றால்
* இன்டீரியர் டெகரேட்டர்
* கிரியேட்டர் செட் டிசைனர்
* எக்சிபிஷன் டிசைனர்
* விண்டோஸ் டிஸ்பிளே டிசைனர்

போன்ற பணிகளில் ஈடுபடலாம். ஒரு படிப்பை வெறும் படிப்பாகப் படிப்பதால் மட்டுமே நாம் அதில் சிறந்து விளங்க முடியாது. ஏற்கனவே தொழில்நுட்பத் தகுதி பெற்றுள்ள நீங்கள் பின்வரும் சிறப்புத் திறன்களைப் பெறுவதும் அவசியம்.

* பண்பாட்டு மாற்றங்களை அறிந்திருப்பது
* ஓவியத் துறையில் ஆர்வம் இருப்பது
* கற்பனை வளம் மிக்கவராக இருப்பது
* படமாக வரைவதை உருவமாக மாற்றும் ஆற்றல் பெறுவது

தமிழ்நாட்டில் பின்வரும் இடங்களில் இன்டீரியர் டிசைனிங் படிப்புகள் நடத்தப்படுகின்றன. ஆனால் இதற்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.
* காலேஜ் ஆப் ஆர்ட் அண்ட் டிசைன், 7 பி.வி. கோவில் தெரு, அமைந்தகரை, சென்னை 600 029.
* ஸ்ரீஅம்மன் கலை அறிவியல் கல்லூரி, ஈரோடு

மேலும் அகமதாபாத்திலுள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் நிறுவனம் இந்த படிப்பை நடத்துகிறது. மேலும் சென்னையிலுள்ள எக்ஸ்டீரியர்ஸ்-இன்டீரியர்ஸ் நிறுவனம் இதில் ஓராண்டு டிப்ளமோ படிப்பை நடத்துகிறது. இவற்றைத் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம்.

பி.காம் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் படிக்கிறேன். அடுத்து என்ன படிக்கலாம்?
பி.காம் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் படிக்கும் நீங்கள் உங்களது படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெற முயற்சிக்கும் அதே சமயம் உங்களது பாடங்களில் சிறப்புத் திறன் பெற்று நன்கு புரிந்து படிப்பது மிக முக்கியம். மேலும் டேலி, ஆரக்கிள், விசுவல் பேசிக் போன்ற கம்ப்யூட்டர் சாப்ட்வேர்களில் சிறப்பாக திறன் பெறுவதும் முக்கியம்.

இவற்றை விட மிக முக்கியமானது பி.காம்., படிப்புடன் ஏ.சி.எஸ்., அல்லது ஐ.சி.டபிள்யூ.ஏ.ஐ., போன்ற கூடுதல் தகுதி பெறுவதாகும். சிறப்புத் தகுதி தரும் ரிஸ்க் மேனேஜ்மென்ட், இன்சூரன்ஸ் மேனேஜ்மென்ட், பினான்சியல் மேனேஜ்மென்ட் போன்றவற்றில் கூடுதல் தகுதி பெற முயற்சிப்பதும் பலன் தரும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us