இந்திராகாந்தி பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை! | Kalvimalar - News

இந்திராகாந்தி பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை!

எழுத்தின் அளவு :

இந்திராகாந்தி திறந்தநிலை பல்கலைக்கழகம் மற்றும் டைரக்டரேட் ஜெனரல் ஆப் சிப்பிங் (டி.ஜி.எஸ்.,) இணைந்து அளிக்கும் பி.எஸ்.சி., நாட்டிக்கல் சயின்ஸ் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு மிகுந்த இப்படிப்பு மர்ச்சண்ட் நேவியில் அதிகாரியாகும் வாய்ப்பை பெறவும் உதவுகிறது.

தகுதிகள்:

பிளஸ் 2 வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடப்பிரிவில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சிருக்க வேண்டும் அல்லது பி.எஸ்.சி., பட்டப்படிப்பில் ஏதாவது ஒரு ஆண்டில் இயற்பியல் பாடமும், 50 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும் அல்லது பி.இ., / பி.டெக்., பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், பிளஸ் 2 அல்லது பட்டப்படிப்பில் ஆங்கில பாடத்தில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 2008 ஆகஸ்ட் 1ம் தேதியின்படி, பிளஸ் 2 படித்தவர்கள் 20 வயதிற்கு மிகாமலும், பி.எஸ்.சி., பட்டம் பெற்றவர்கள் 22 வயதிற்கு மிகாமலும், பி.இ., / பி.டெக்., படித்தவர்கள் 24 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

உடற்தகுதி: மெடிக்கல் எக்சாமினேஷன் ரூல்ஸ் 2000ன்படி உரிய உடற்தகுதியை பெற்றிருக்க வேண்டும். கண்பார்வை: 6/6 என்ற பார்வை அளவில் இரு கண்களும் இருக்க வேண்டும்.

இந்த தகுதிகளை பெற்றிருப்பவர்கள் நுழைவுத்தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். நுழைவுத்தேர்வு வரும் ஜூன் 12ம் தேதி நடைபெற உள்ளது.

www.ignou.ac.in என்ற பல்கலைக்கழக வெப்சைட்டில் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் டெல்லியில் செல்லத்தக்க வகையில் The Registrar (SR&ED), Block-12, Indira Gandhi National Open University, Maidan Garhi, New Delhi 110 068 என்ற பெயரில் எடுக்கப்பட்ட ரூ.600க்கான டி.டி.யுடன் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி தேதி: 27-05-2008.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us