எனது பெயர் வேலாயுதன். நான் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர். மார்க்கெடிங் மற்றும் விற்பனை பொறியாளருக்கான எதிர்காலம் மற்றும் தொழில் வளர்ச்சிக் குறித்து அறிந்துகொள்ள ஆசை. நான் விற்பனை பொறியாளராக மாற விரும்பினால், மார்க்கெடிங் எம்பிஏ முடித்திருக்க வேண்டுமா? எனக்கு குழப்பமாக இருக்கிறது. தயவுசெய்து விளக்கவும். | Kalvimalar - News

எனது பெயர் வேலாயுதன். நான் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர். மார்க்கெடிங் மற்றும் விற்பனை பொறியாளருக்கான எதிர்காலம் மற்றும் தொழில் வளர்ச்சிக் குறித்து அறிந்துகொள்ள ஆசை. நான் விற்பனை பொறியாளராக மாற விரும்பினால், மார்க்கெடிங் எம்பிஏ முடித்திருக்க வேண்டுமா? எனக்கு குழப்பமாக இருக்கிறது. தயவுசெய்து விளக்கவும்.பிப்ரவரி 26,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

எந்த வணிகத்தை எடுத்துக் கொண்டாலும், அதன் முக்கிய அம்சங்களாக இருப்பவை, மார்கெடிங் மற்றும் விற்பனை நடவடிக்கைகள்தான். வளர்ச்சி வாய்ப்பு மற்றும் சம்பளம் ஆகிய அம்சங்களில் மார்கெடிங் மற்றும் விற்பனை போன்றவை முக்கியமானவை. இந்த இரண்டிலும் நீங்கள் திறமைசாலியாக இருந்தால், உங்களால் நல்ல பணி வாய்ப்புகளுக்கு மாற முடியும். ஆனால், இத்துறையில் நுழைவதற்கு கட்டாயம் எம்பிஏ(மார்கெடிங்) வேண்டும் என்ற தவறான கருத்து இருக்கிறது. அது தேவையில்லை. உண்மையில், தேவையான அம்சங்கள் என்னவெனில்,

* மக்களுடன் நன்றாகவும், சகஜமாகவும் பேசும் திறன்

* திடமான மனப்போக்கு

* மற்றவர்களை ஒப்புக்கொள்ள வைக்கும் திறமை

* தொழில்நுட்பத் துறையைவிட, வணிகத் துறையில் ஆர்வம் கொண்டிருத்தல்

மேற்கூறிய பண்புகள் உங்களுக்கு இருப்பதை உணர்ந்தால், நீங்கள் தாராளமாக மார்கெடிங் துறைக்கு செல்லலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us