எனது பெயர் கமலேஷ். நான் தற்போது 12ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். நான் பிற்காலத்தில் பயோடெக்னாலஜி துறையில் ஈடுபட விரும்புகிறேன். இப்படிப்பை மேற்கொள்ள இந்தியாவிலுள்ள சிறந்த அரசு கல்வி நிறுவனங்கள் எவை மற்றும் அவற்றில் நான் எப்படி சேர்வது? அக்கல்வி நிறுவனங்கள் நடத்தும் நுழைவுத் தேர்வுகளுக்கு எப்படி தயாராக வேண்டும்? | Kalvimalar - News

எனது பெயர் கமலேஷ். நான் தற்போது 12ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். நான் பிற்காலத்தில் பயோடெக்னாலஜி துறையில் ஈடுபட விரும்புகிறேன். இப்படிப்பை மேற்கொள்ள இந்தியாவிலுள்ள சிறந்த அரசு கல்வி நிறுவனங்கள் எவை மற்றும் அவற்றில் நான் எப்படி சேர்வது? அக்கல்வி நிறுவனங்கள் நடத்தும் நுழைவுத் தேர்வுகளுக்கு எப்படி தயாராக வேண்டும்?மார்ச் 14,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

பல புகழ்பெற்ற பயோடெக்னாலஜி கல்லூரிகள் அரசாலேயே நடத்தப்படுகின்றன. அதேசமயம், ஏறக்குறைய அனைத்துக் கல்லூரிகளும் முதுநிலைப் படிப்பிலேயே மாணவர்களை சேர்த்துக் கொள்கின்றன. அவற்றில் சேர, தேசிய அளவில் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.

நீங்கள் இளநிலை அளவில், Botony அல்லது Zoology போன்ற படிப்புகளைப் படிக்க வேண்டும் மற்றும் வேதியியல் அல்லது கணிதம் போன்ற பாடங்களை துணைநிலைப் பாடங்களாகக் கொண்டிருக்க வேண்டும். அதேசமயம், இளநிலைக் கல்வியை நல்ல கல்லூரியில் படிப்பதையும் உறுதிசெய்ய வேண்டும். ஏனெனில், சிறப்பான அடித்தளமே, உங்களின் எதிர்கால பயோடெக்னாலஜி சாதனைக் கனவை நனவாக்கும்.

இரண்டாம் வருட பட்டப்படிப்பை மேற்கொள்கையில், கம்ப்யூட்டிங் அடிப்படைகளைக் கற்றுக்கொள்ளவும். ஒரு டேட்டாபேஸ் தொழில்நுட்பம் மற்றும் ஒரு ப்ரோகிராமிங் மொழி ஆகியவற்றை சிறப்பாக கற்றுக் கொள்ளவும். ஏனெனில், பயோடெக் துறையில் நாம் பெறும் வெற்றியானது, நமது சிறப்பான கம்யூட்டிங் அறிவைச் சார்ந்தது.

பொதுவாக, விஞ்ஞானிகள், இளநிலை பட்டப் படிப்பில், எந்தவித சிறப்பு படிப்பையும் மேற்கொள்ள பரிந்துரைப்பதில்லை. ஆராய்ச்சிப் படிப்பெல்லாம் முதுநிலையில்தான் பரிந்துரைக்கப்படுகின்றன. ஏனெனில், அறிவியலின் பல அடிப்படை விதிகள் மற்றும் அம்சங்களை இளநிலையில் நாம் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us