டாக்டராக விரும்பும் மாணவர்களுக்கு... | Kalvimalar - News

டாக்டராக விரும்பும் மாணவர்களுக்கு...

எழுத்தின் அளவு :

டாக்டராக விரும்பும் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் எவ்வாறு படித்து தேர்வெழுதினால் நல்ல மதிப்பெண் பெறலாம் என்று ஜெயித்துக் காட்டலாம் நிகழ்ச்சியில் ஆசிரியர் ஆலோசனை கூறினார்.

அன்னூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ரகு (உயிரியல்): உயிரியல் பாடத்தில் சிறந்து விளங்கும் மாணவர்கள் எதிர்காலத்தில் டாக்டராக முடியும். விலங்கியல் 75; தாவரவியல் 75 என 150 மதிப்பெண் இருக்கும். விலங்கியல் பிரிவில் ஏழு பாடங்களில் இருந்து 10 மதிப்பெண் கேள்விகள் கேட்கப்படும். உடல் செயலியல் பாடம் 100 பக்கங்களில் உள்ளது. மீதியுள்ள ஆறு பாடங்களும் சேர்த்து 100 பக்கங்களில் உள்ளது. டாக்டராக விரும்பும் மாணவர்கள், உடல் செயலியல் பாடத்தில் கைதேர்ந்திருக்க வேண்டும்.

ஐந்து, ஆறாவது பாடங்களில் இருந்து ஒரு கேள்வி கட்டாயம் வரும்; பயன்பாட்டு உயிரியல், இடர்கழிவுகள் மேலாண்மை ஆகிய குறித்த கேள்விகள் இடம்பெறும்.

ஒவ்வொரு 10 மதிப்பெண் வினாக்களுக்கும், உள்தலைப்பு மிக முக்கியம்; புத்தகத்தில் இருப்பது போன்ற தலைப்புகள் மட்டும் எழுத வேண்டும். நன்னீர் மேலாண்மை, கறவை மாடு, கால்நடை நோய், பண்ணை அமைப்பு முறை ஆகியவற்றில் இருந்தும் வினாக்கள் வரும்.

மேலும், இ.சி.ஜி., மற்றும் சி.டி., ஸ்கேன் குறித்தும் தரவாக படிக்க வேண்டும். இதில், 3, 4 மற்றும் 7வது பாடங்களில் இருந்து அதிக கேள்விகள் வரும் வாய்ப்புள்ளது.

மூன்று மதிப்பெண் வினாக்கள் 12 கேட்கப்படும்; எட்டு எழுத வேண்டும். புத்தகத்தில் சற்று பெரிய எழுத்துக்களில், அதிக மையுடன் அச்சசாகியுள்ள பகுதிகளில் இருந்து எட்டு கேள்விகள், மற்ற பகுதிகளில் இருந்து நான்கு கேள்விகள் வரும்.

ஒரு மதிப்பெண் வினாக்களை சரியாக எழுத, புத்தகத்தை வரி விடாமல் படிக்க வேண்டும். அப்போது, 150 மதிப்பெண் பெற முடியும். விலங்கியல் பிரிவில், 1,2,3,4,5,6வது பாடங்களில் இருந்து அதிக கேள்விகள்  வரும். புத்தகத்தில் இருப்பதை தொடர்ந்து படிக்க வேண்டும். தேர்வை தெளிவாக எழுதி முடித்து, ஒருமுறை படித்து பார்க்க வேண்டும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us