எனது பெயர் ரமேஷ். ஐரோப்பிய நாடுகளில் வழங்கப்படும் எம்பிஏ படிப்புகள், அமெரிக்காவில் வழங்கப்படும் எம்பிஏ படிப்பைவிட, குறைந்த காலஅளவு கொண்டது என்று கேள்விப்பட்டேன். எனவே, அதையே நான் மேற்கொள்ள விரும்புகிறேன். குறைந்த கால அளவினால், படிப்பின் தரம் மற்றும் மதிப்பு குறையுமா? | Kalvimalar - News

எனது பெயர் ரமேஷ். ஐரோப்பிய நாடுகளில் வழங்கப்படும் எம்பிஏ படிப்புகள், அமெரிக்காவில் வழங்கப்படும் எம்பிஏ படிப்பைவிட, குறைந்த காலஅளவு கொண்டது என்று கேள்விப்பட்டேன். எனவே, அதையே நான் மேற்கொள்ள விரும்புகிறேன். குறைந்த கால அளவினால், படிப்பின் தரம் மற்றும் மதிப்பு குறையுமா?ஜனவரி 19,2013,00:00 IST

எழுத்தின் அளவு :

ஒரு படிப்பின் மதிப்பிலும், தரத்திலும் வெறும் காலஅளவு மட்டுமே முக்கியப் பங்கு வகிப்பதில்லை. இரண்டு வகை படிப்புகளிலுமே, பாடத்திட்டம் மற்றும் சாரம் ஆகியவை ஒன்றுதான். வித்தியாசம் என்பது, இரண்டாம் ஆண்டில், சிறப்பு படிப்புகளின் எண்ணிக்கையிலும், இன்டர்ன்ஷிப்பிலும், தேர்ந்தெடுப்பவைகளிலும்தான் உள்ளது. ஐரோப்பிய 1 வருட எம்பிஏ படிப்பானது, சில அமெரிக்க கல்வி நிறுவனங்களின் 2 வருட எம்பிஏ படிப்பைக் காட்டிலும் கூடுதலாக மதிக்கப்படுகிறது.

ஐரோப்பிய மேலாண்மைப் பள்ளிகளில் படிக்கும் பல பட்டதாரிகள், வேறு நாடுகளில் பணிபுரியவே விரும்புகிறார்கள். அவர்கள், பழைய மாணவர் நெட்வொர்க் மூலமாகவும், சொந்த முயற்சிகளின் மூலமாகவும் மற்றும் கேரியர் சப்போர்ட் செல் மூலமாகவும் நல்ல பணி வாய்ப்புகளைப் பெறுகிறார்கள்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us