என் பெயர் கிருஷ்ணகாந்த். எனது தங்கை தமிழ் பி.ஏ., படிக்கிறாள். அவள் தனது துறையை மாற்ற விரும்புகிறாள். எனவே, அவளுக்கான வாய்ப்புகள் எவை? நாங்கள் சிறிய நகரத்தில் வசிக்கிறோம். | Kalvimalar - News

என் பெயர் கிருஷ்ணகாந்த். எனது தங்கை தமிழ் பி.ஏ., படிக்கிறாள். அவள் தனது துறையை மாற்ற விரும்புகிறாள். எனவே, அவளுக்கான வாய்ப்புகள் எவை? நாங்கள் சிறிய நகரத்தில் வசிக்கிறோம்.பிப்ரவரி 14,2013,00:00 IST

எழுத்தின் அளவு :

உங்கள் தங்கை, எம்.ஏ.,(மொழிபெயர்ப்பு) படித்தால், அவருக்கு அதிகளவிலான வேலை வாய்ப்புகள் உண்டு. பல அரசுத் துறைகளில் பணி வாய்ப்புகள் உண்டு என்றாலும், எண்ணிக்கை குறைவு. வேறொரு சிறந்த வாய்ப்பு என்னவெனில், ஜர்னலிசம் மற்றும் மாஸ் கம்யூனிகேஷன் படிப்பை மேற்கொள்ளலாம். தமிழ் மீடியா உலகில் அதற்கு வாய்ப்புகள் மிக அதிகம். அதேசமயம், இத்துறைக்கு திறனும் முக்கியம்.

மற்றபடி, போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதும் ஒரு சிறந்த முயற்சியே. நீங்கள் உங்களின் தங்கைக்கு ஆலோசனை கூறும் முன்பாக, அவரின் உண்மையான விருப்பம் என்ன, அவரின் திறன்கள் என்ன என்பதை கேட்டறிந்து, முடிவெடுக்கவும். உங்கள் தங்கை, பெரிய நகரத்திற்கு இடம்பெயர்ந்து செல்ல விருப்பமுள்ளவரா என்பதையும் அறிந்து கொள்ளவும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us