நோக்க அறிக்கை எழுதுவதில் தயக்கம் வேண்டாம் | Kalvimalar - News

நோக்க அறிக்கை எழுதுவதில் தயக்கம் வேண்டாம்ஏப்ரல் 26,2011,00:00 IST

எழுத்தின் அளவு :

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் சேர்வதில் நல்ல மதிப்பெண்கள், பண வசதி, ஆங்கில அறிவு போன்றவற்றுடன் வேறு ஒரு முக்கிய அம்சமும் தேவை. அதுதான் பர்பஸ் ஸ்டேட்மென்ட் எனப்படும் நோக்க அறிக்கை. ஏனெனில் இதன்மூலம் மாணவரின் விருப்பம், திறமை, தகுதி மற்றும் எதிர்கால இலட்சியங்களைப் பற்றி சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களின் சேர்க்கை அதிகாரிகள் தெரிந்துகொள்ள முடியும்.

ஆனால் தற்போது பல மாணவர்கள் இதுபோன்ற கட்டுரை அறிக்கைகளை எழுதுவதில் தேவையற்ற பயம் மற்றும் தயக்கத்தை கொண்டுள்ளார்கள். இங்கே நாம் அதை எப்படி எளிதாகவும், சிறப்பாகவும் எழுதலாம் என்பதைப் பற்றி தெளிவான ஆலோசனைகளை வழங்கியிருக்கிறோம்.

பெரிய வார்த்தைகள் மற்றும் அலங்கார மொழிநடையை தவிர்த்தல்:

அந்தக் கட்டுரைகளில் எண்ணங்களின் தெளிவு தன்மையும், தனக்கான தேவையை சிறப்பாக வரையறுத்துக் கூறும் அம்சமும் இருந்தால், அந்த விண்ணப்பம் முக்கியத்துவம் பெரும்சேர்க்கை அதிகாரிகள் சிறப்பான பயிற்சி பெற்றவர்கள் என்பதால்கட்டுரைகளில் கூறப்படும் மிகையான தகவல்களை எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள்எனவே உங்களின் சாதனைகளை மிகைப்படுத்த வேண்டாம்வேண்டுமென்றே கவனத்தை கவரும் விதத்தில் கட்டுரையை எழுதியிருந்தால், பல வருட அனுபவம் உள்ள சேர்க்கை அதிகாரிகள் அதைக் கண்டுபிடித்து விடுவார்கள்.

அசலாக இருத்தல்:

நீங்கள் சமர்ப்பிக்கும் கட்டுரை உங்களால் உண்மையாக எழுதப்பட்டிருக்க வேண்டும். ஏதேனும் புத்தகம் அல்லது இணைய தளத்தில் இருந்து எடுக்கப்பட்டிருக்க கூடாதுஅப்படி செய்தால் நீங்கள் சமர்ப்பிக்கும் கட்டுரைக்கு வேறு யாரேனும் உரிமை கோரலாம்உங்களின் கட்டுரை நீங்கள் எழுதியதல்ல என்று சேர்க்கை குழு சந்தேகப்பட்டு கண்டுபிடித்துவிட்டால்உங்களுக்கான சேர்க்கை அனுமதி மறுக்கப்படும்.

மேலும் உங்களின் ஜிஆர்இ, ஜிமேட் எடபிள்யுஎ போன்ற தேர்வுகளின் மதிப்பெண்கள் ஏற்கனவே பல்கலைக்கழகத்திடம் இருக்கும்அதன்மூலம் உங்களின் திறனை முன்பே அவர்கள் மதிப்பிட்டிருப்பார்கள்எனவே நீங்கள் எழுதும் கட்டுரையையும் அவர்களால் மதிப்பிட்டுவிட முடியும். இதனால் போலியான கட்டுரைகளை தவிர்க்கவும். போலியின் மூலம் உங்களின் சேர்க்கையே பாதிக்கப்படும். மேலும் புதிய சாட் தேர்வானது ஒரு எழுதுதல் பகுதியை கொண்டுள்ளது. எனவே நேர்மையாக இருந்தால் பிரச்சினையில்லை.

எம்பிஎ படிப்புகளுக்கான நோக்க அறிக்கைகள்:

வணிக படிப்புகளுக்கான கல்வி நிறுவனங்கள் பல, ஒரேயொரு ஒற்றை அறிக்கை மட்டுமல்லாமல்பல கட்டுரைகளின் தொகுப்பை எதிர்பார்க்கிறதுவணிகப் பள்ளிகளுக்கான உங்கள் கட்டுரையானது, நீங்கள் யார், உங்களின் அகப்பார்வைஉங்களின் தொழில் லட்சியத்தில் உங்கள் பணி அனுபவம் ஏற்படுத்திய தாக்கம், அந்த அனுபவத்தில் நீங்கள் கற்ற பாடம் ஆகிய கருத்தாக்கங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும்.

மேலும் உங்களின் குழுத் தலைமை அனுபவம், குழுப் பணி அனுபவம், பொருந்தக்கூடிய பணி அனுபவங்கள், எம்பிஎ படிப்பிற்கு பின்னர் உங்களின் லட்சியம் போன்றவற்றை குறிப்பிட வேண்டும். மேலும் படிப்பில் உங்களின் சாதனை, நல்ல ஜிமேட் மதிப்பெண்கள் ஆகியவை மட்டுமே ஒரு நல்ல வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் உங்களுக்கு இடம் தந்துவிடாதுஉங்கள் விண்ணப்பத்துடன் நீங்கள் எழுதி அனுப்புகின்றநீங்கள் உண்மையில் யார் என்று கூறும் கட்டுரைகளும் பல்கலைக்கழக சேர்க்கையில் முக்கியப் பங்காற்றுகின்றனஎனவே உங்கள் விண்ணப்பம் தனித்தன்மை உடையதாக இருக்கட்டும்.  

நோக்க அறிக்கை மற்றும் கட்டுரையில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை:

எழுதுவதை நீங்களே உண்மையாக எழுதுங்கள்.

நோக்க அறிக்கை மற்றும் கட்டுரையில் ஏதேனும் இலக்கணம் அல்லது எழுத்துப் பிழை உள்ளதா என்று ஒன்றுக்கு இரண்டுமுறை சரிபார்க்கவும்.

எழுதுவது சீரான நடையில் இருக்க வேண்டும்.

எழுதக்கூடியதை வெறும் தகவலாக கூறாமல் ஆய்வுப்பூர்வமாக எழுத வேண்டும்.

வழக்கமாக பயன்படுத்தும் வார்த்தைகளிலேயே எழுத வேண்டும்.

எழுதும்போது உங்கள் இயல்பிலிருந்து மாற வேண்டாம்.

கட்டுரையில் அதிகமான எதிர்மறை சிந்தனைகளை வெளிப்படுத்த வேண்டாம்.

புத்தகம் மற்றும் இணையதளத்திலிருந்து தகவல்களை எடுக்க வேண்டாம்.

நீங்கள் விண்ணப்பிக்கும் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் தனித்தனி நோக்க அறிக்கைகளை எழுதவும் அல்லது ஒரே அறிக்கையை ஒவ்வொரு கல்வி நிறுவனத்திற்கும் ஏற்ற வகையில் மாற்றி அமைக்கவும்.

* நோக்க அறிக்கையின் மொழிநடையானது நேரடியாகவும், தெழிவான நோக்கம் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.

நோக்க அறிக்கையை மிக நீளமாக எழுதத் தேவையில்லை. ௫௦௦ முதல் ௭௫௦ வார்த்தைகள் போதுமானவை.

இணைதளத்தில் அனுப்பும் உங்கள் விண்ணப்பத்துடனேயே நோக்க அறிக்கையை பதிவேற்றி அனுப்பலாம் அல்லது விண்ணப்பத்துடன் தனியாக அனுப்பலாம்.

நோக்க அறிக்கை உங்களைப் பற்றியது என்பதால், உங்களைப் பற்றி நீங்களே நேரடியாக சேர்க்கை குழுவிற்கு கூறுகிறீர்கள் என்பதால், நீங்கள் கூறும் நடையிலேயே எழுதவும்.

உங்கள் நோக்க அறிக்கையை உளப்பூர்வமாகவும், நீங்கள் ஏன் உயர்க்கல்வி கற்க வேண்டும் என்ற காரணத்தை தெளிவாக கூறுவதாகவும் எழுதவில்லை எனில், அது தனது நோக்கத்தை நிறைவேற்றாது.

 

 

 

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us