அமெரிக்காவில் கேட்டரிங் தொடர்பான படிப்பைப் படிக்க விரும்புகிறேன். இந்தப் படிப்புக்காக நாம் அங்கே செல்ல என்ன விசாவைப் பெற வேண்டும்? | Kalvimalar - News

அமெரிக்காவில் கேட்டரிங் தொடர்பான படிப்பைப் படிக்க விரும்புகிறேன். இந்தப் படிப்புக்காக நாம் அங்கே செல்ல என்ன விசாவைப் பெற வேண்டும்? நவம்பர் 29,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

அமெரிக்காவில் கேட்டரிங், கலினரி ஆர்ட்ஸ் போன்ற படிப்புகளைப் படிக்க நீங்கள் பெற வேண்டிய விசாவானது எம்1 என அழைக்கப்படுகிறது. இது ஒரு ஆண்டுக்கு செல்லு படியாகும். விசாவைப் பெற்ற பின் நீங்கள் இதை வேறு படிப்புக்கான விசாவாக மாற்ற முடியாது. விசாவைப் பெறுவதற்கு முன்பாக முழுக் கட்டணமும் செலுத்தியதற்கான ரசீது, தங்குமிட உறுதிப்பாட்டுச் சான்றிதழ், படிப்புக் காலத்தின் போது நீங்கள் சந்திக்க வேண்டிய அத்தனை செலவுகளையும் சமாளிக்க உங்களிடம் போதுமான பணம்இருப்பதற்கான அத்தாட்சி ஆகியவற்றை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

விசாவைத் தருவதற்கு முன்பாக எதற்காக இந்தப் படிப்பை அமெரிக்காவில் படிக்க நீங்கள் விரும்புகிறீர்கள், படித்த பின் என்ன செய்ய திட்டமிட்டிருக்கிறீர்கள் என்பது போன்ற கேள்விகள் கேட்கப்படலாம். எனவே இதற்கெல்லாம் தயாராக பதிலளிக்கும் வகையில் நீங்கள் செல்ல வேண்டியது அவசியம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us