வேலைவாய்ப்புத் திறன் பயிற்சி அவசியம் - அப்பல்லோ கல்வி நிறுவன பிரியதர்ஷன் | Kalvimalar - News

வேலைவாய்ப்புத் திறன் பயிற்சி அவசியம் - அப்பல்லோ கல்வி நிறுவன பிரியதர்ஷன்

எழுத்தின் அளவு :

அப்பல்லோ கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் பிரியதர்ஷன் அளித்த பேட்டி:

தமிழகத்தில் கனிணி பயிற்சி மையங்களை ஏற்படுத்தி மாணவர்கள் மத்தியில் கனிணி குறித்த விழிப்புணர்வையும், குறைவான தொகையில் கனிணி பயிற்சியையும் அளித்து வந்த அப்பல்லோ நிறுவனம், பாலிடெக்னிக் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பள்ளிக்கூடம், பொறியியல் கல்லூரி என கல்வித் துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறது.

பள்ளிப்பருவத்தை மகிழ்ச்சிகரமாக முடித்து வரும் மாணவர்களை, தொழில் வல்லுநர்களாக உருவாக்கும் வகையில் முதல் வருடத்தில் இருந்தே மொழிப்பயிற்சி, வேலைவாய்ப்புப் பயிற்சி என தனித்திறன் வளர்க்கும் பயிற்சிகள், தொழில் நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்டு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அனைத்தும் வழங்கப்படுகின்றன. ஆண்டுக்கு 60 மணி நேரம் என நான்கு ஆண்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

நிறுவனங்களைப் பொறுத்த வரையில் பொறியியலின் அடிப்படையை மாணவர்கள் தெரிந்திருக்க வெண்டும் என விரும்புகின்றன. அவற்றின் எதிர்பார்ப்பை நிறுவனங்களில் உள்ளவர்களைக் கொண்டே பயிற்சி அளிக்கும்பொழுது, நிறுவனத்தின் தேவைகளை மாணவர்கள் எளிதில் அறிந்து கொள்ளவும், கற்றுக்கொள்ளவும் வாய்ப்பாக அமைகிறது. மேலும் ஒரு செமஸ்டருக்கு 2 தொழில் நிறுவனங்களை மாணவர்களை பார்வையிட வைத்து, நிறுவனங்களின் செயல்பாடுகளை நேரடியாக அறிந்துகொள்ள வழிவகை செய்யப்படுகிறது.

கட்டுப்பாட்டுக்கும், ஒழுக்கத்திற்கும் முக்கியத்துவம் அளித்து மாணவர்களின் மேம்பாட்டுக்காக பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு, மாணவரின் கல்வி நிலை குறித்த எஸ்.எம்.எஸ். வசதி போன்றவைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாணவியரின் பாதுகாப்புக்கும், கல்விக்கும் முக்கியத்துவம் அளிப்பதால் இங்கு 60 விழுக்காட்டிற்கும் மேல் மாணவியர் கல்வி கற்று வருகிறார்கள். பெண்களுக்கு என சிறப்பு விழிப்புணர்வு வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.

மாணவர்களுக்கு அவசியமான, அத்தியாவசிய தேவைகளை சரியான விதத்தில் அளிக்கும்பொழுது, அவர்களின் ஆர்வம் கல்வி கற்பதில் மட்டுமே இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு நகரின் பல இடங்களிலிருதும் எளிதான பேரூந்து வசதி, ஆண்கள் மற்றும் பெண்களுக்கென பல்வேறு வசதிகளைக் கொண்ட தனித்தனி விடுதி வசதிகள், உணவு, விடுதி மாணவர்களுக்கு என தனியாக சிறப்புப்பயிற்சிகள் என அனைத்து வசதிகளும் சிறப்பாக வழங்கப்படுகின்றன. தனியார் சேவை நிறுவனங்களுடன் இணைந்து மாணவர்களுக்கு இலவசக் கல்வி, உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us