‘வருங்காலம் வாய்ப்புகளின் காலம்’ | Kalvimalar - News

‘வருங்காலம் வாய்ப்புகளின் காலம்’

எழுத்தின் அளவு :

P.B. பொறியியல் கல்லூரி தலைவர் வெங்கடராமன் அளித்த பேட்டி:

மாணவர்களுக்கு புத்தகங்களைக் கடந்த கற்றலையும், புதிய கண்டுபிடிப்புகளை கண்டறிவதற்கான திறனையும் அளித்து சிறந்த பொறியாளராக உருவாக்குவதே கல்லூரியின் நோக்கம். பொறியியல் படித்தால் வேலையில்லை என்பது தவறான கருத்து. கடந்த சில வருடங்களாக உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளின் காரணமாக, இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவிலும் வேலைவாய்ப்பின்மை குறித்த அச்சம் நிலவியது. ஆனால் மீண்டு வரும் பொருளாதார வளர்ச்சியின் காரணமாக அடுத்து வரும் ஆண்டுகளில் வேலைவாய்ப்பிற்கான சூழல் சிறப்பாக இருக்கும்.

மாணவரின் நிலை, கல்வி அளிக்கும் முக்கியத்துவத்தை பொறுத்தே வளர்ச்சி அடைகிறது. மேம்பட்ட கல்வியை அளிப்பதற்காக சிறப்பான ஆய்வக வசதிகள், மென்திறன் வளர்க்கும் பயிற்சிகள் அவசியமும் அத்தியாவசியமாக இருக்கிறது. முதல் ஆண்டு மாணவர்களுக்காக ‘நர்ச்சர் 4சி.இ.‘ எனும் திறன் மேம்பாட்டு பயிற்சியை அளித்து, மாணவர்களை வேலைவாய்ப்புக்கு ஏற்ற வகையில் தயார்படுத்தி வருகிறோம்.

சிறந்த வசதிகளை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டதால்தான், அண்ணா பல்கலைக்கழகத்தால் 2009ல் நியமிக்கப்பட்ட ஆய்வுக் குழு சிறந்த ஆய்வக வசதிகளுக்கான தர வரிசையில், ஏரோனோடிக்கல் ஆயவகத்துக்கு முதலிடமும், இ.இ.இ., இ.சி.இ. ஆய்வகங்களுக்கு முறையே 5 மற்றும் 13வது இடத்தையும் அளித்தது. ஏரோநாட்டிக்கல் துறையில் சாதனை மாணவர்களை உருவாக்கி வருவதற்கு எடுத்துக்காட்டாக, கல்லூரியில் படித்த 7 மாணவர்கள், ஜெர்மனி அரசாங்கத்தின் மூலம் இலவசமாக அங்கே மேற்படிப்பை படிப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடப்பிரிவு மாணவர்கள் கல்வி கற்கும்பொழுதே தொழிலகப் பயிற்சியினைப் பெற வேண்டும் என்பதற்காக ‘இந்தியன் இன்ஸ்டிடீயூட் ஆப் பவுண்டரிமென்‘ அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.

தொடர்ந்து பெருகி வரும் வேலைவாய்ப்புக்களால் கனிணி துறையிலும், மற்ற தொழில் துறைகளிலும் வேலைவாய்ப்புக்கள் அதிகரிக்கும் நிலை உள்ளது. குறிப்பிட்ட கால இடைவெளியில் மாறி வரும் பாடத்திட்டங்களாலும், பொறியியல் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us