விளம்பரத் துறையில் உள்ள பணிப் பிரிவுகள் என்ன? நான் தற்போது அட்வர்டைசிங் பட்ட மேற்படிப்பு படித்து வருகிறேன். | Kalvimalar - News

விளம்பரத் துறையில் உள்ள பணிப் பிரிவுகள் என்ன? நான் தற்போது அட்வர்டைசிங் பட்ட மேற்படிப்பு படித்து வருகிறேன். டிசம்பர் 02,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

விளம்பரத் துறையில் உள்ள பணிப் பிரிவுகள் என்ன? நான் தற்போது அட்வர்டைசிங் பட்ட மேற்படிப்பு படித்து வருகிறேன்.

விளம்பரத் துறையின் வாடிக்கையாளர்களுக்குத் தரவேண்டிய சேவை மிகத் தரமாதாக இருக்க வேண்டும். வாடிக்கையாளர் சேவை, உருவாக்கப் பிரிவு, மீடியா துறை, உற்பத்தி, டிவி, திரைப்படம், போட்டோகிராபி, மார்க்கெட் ரிசர்ச், ஈவண்ட் மேனேஜ் மென்ட், டைரக்ட் மார்க்கெட்டிங் போன்ற பிரிவுகள் இதில் உள்ளன.

இதிலுள்ள அக்கவுண்டிங் பணிகள் சிறப்பான தன்மை கொண்டவை. வாடிக்கையாளர்களுக்கான பொருட்கள் அல்லது சேவை தொடர்பான விளம்பர மற்றும் மேம்பாட்டு நடடிக்கைகளை இவர் பட்டிலிடுகிறார். வாடிக்கையாளரின் தேவையை அறிந்த பின் இவர்கள் தங்களது நிறுனத்திடம் இந்தத் தேவையை தெரிவிக்கிறார்.

விளம்பரத் துறையின் நுணுக்கங்களை அறிந்து இவர்கள் திறம்பட விளம்பரங்களை உருவாக்கி வெளியிடுகின்றனர். விளம்பரத் துறையில் கிரியேடிவ் பிரிவு வேலைளும் சவாலானவை தான். இத் துறையில் மிளிர சிறப்புப்படிப்புகள் தேவையில்லை என்றாலும் இன்றைய சூழலில் விளம்பரப் படிப்புகளை முடித்து வருவோருக்கு நல்ல வரவேற்பு இருப்பது உண்மை தான்.

பொதுவாக மாஸ் கம்யூனிகேஷன்ஸ் படிப்பில் விளம்பரம் ஒரு பாடமாக இடம் பெறுகிறது. ஆனால் நீங்கள் சிறப்புப் படிப்பாக இதைப் படிப்பதால், நல்ல வாய்ப்புகளை நீங்கள் பெறலாம். எனினும் வெறும் தகுதியைக் கொண்டு மட்டுமே நீங்கள் பணி வாய்ப்புளைப் பெற முடியாது. விளம்பரத் துறைக்குத் தேவை

கிரியேடிவ் திறன். இதை பரலான பொது அறிவையும் ஆர்வத்தை-யும் கொண்டே நீங்கள் பெற முடியும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us