‘தோல்வியைக் கண்டு துவளாதே’ | Kalvimalar - News

‘தோல்வியைக் கண்டு துவளாதே’

எழுத்தின் அளவு :

ஆலிம் முகமது சாலிக் கல்விக் குழும செயலர் சேகு ஜமாலுதின் அளித்த பேட்டி:

மாணவர்கள் முதலில் பெற்றோர்களை நினைக்க வேண்டும். பெற்றோர்கள் பிள்ளைகளுக்காக படும் துன்பங்களை வெளிக்காட்டாமல், அவர்களின் தேவைகளை நிறைவேற்றுகின்றனர். மாணவர்கள் இதனை உணர்ந்து தங்கள் குறிக்கொளை வெற்றிகரமாக முடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அதே நேரத்தில் தோல்வியைக் கண்டு துவளவும் கூடாது; முயற்சியுடையார் இகழ்ச்சியடையார். தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி தேடி வரும்.

திறமையான ஆசிரியர்கள், சிறந்த நிர்வாகம் மற்றும் தேவையான கட்டமைப்பு வசதிகள் இருப்பதோடு, மாணவருக்கும் படிப்பின் மீது ஆர்வம் இருக்கும்பொழுது கற்கும் கல்வி பயனுள்ளதாக இருக்கும். நிறுவனங்களுக்கு தகுந்தவாறு மாணவரை கல்வி நிலையங்கள் உருவாக்க வேண்டும்.

ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தை எந்த நேரமும் தொடர்புகொள்ளும் வசதி அளிக்க வேண்டும். மாணவர் மற்றும் நிர்வாகம் இடையே இடைவெளிகள் இல்லாமல் இருக்கும்பொழுது மாணவர் நலன் சிறப்பாக பேணப்படும். அதனால்தான் ஏ.ஐ.சி.டி.இ. ஆல் ‘டீச்சர்ஸ் கார்டியன்‘ எனும் சிறப்பு பாராட்டுதலைப் பெற்றிருக்கிறோம்.

4 வருடம் கஷ்டபட்டால் 40 வருடம் நலமாக இருக்கலாம். கடினப்பட்டு படிப்பதற்கு ஏற்ப எதிர்காலம் வளர்ச்சியுடனும், பிரகாசமாகவும் இருக்கும். ஓய்வில்லாமல் உழைத்தால் தான் வெற்றி கிடைக்கும். இன்றைய சோம்பல் நாளையும் சோம்பலை தரும். எடுத்த காரியத்தை தள்ளி வைக்காதே, இன்றே செய்; நீ செய்யும் செயல் எழுச்சி பெறும்.

அமெரிக்கா எடுத்த முடிவுகளால், கடந்த சில ஆண்டுகளாக வேலைவாய்ப்பினை பெறுவது இந்தியாவிற்கு கடினமாக இருந்தது. தற்போது எடுக்கப்பட்டு வரும் சிறப்பான நடவடிக்கைகளால் வரும் காலங்களில் வேலைவாய்ப்பு பெருகும் என நம்புகிறேன்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us