‘இன்ஜினியரிங் படிப்பை அனுபவித்து படிக்க வேண்டும்’ | Kalvimalar - News

‘இன்ஜினியரிங் படிப்பை அனுபவித்து படிக்க வேண்டும்’

எழுத்தின் அளவு :

கோஜன் கல்வி நிறுவனங்களின் செயலர் பாபு அளித்த பேட்டி:

லாபநோக்கமற்று, கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு தரமான கல்வியை வழங்குவதையே நோக்கமாக கொண்டு இக்கல்வி நிறுவனம் செயல்படுகிறது. ஆண்டுதோறும் குறிப்பிட்ட ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வியை வழங்குகிறோம். மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி அளிக்கப்படுகிறது. சிறைச்சாலைக்கு சென்று அங்குள்ள கைதிகளுக்கு இலவச வகுப்புகள் நடத்தியுள்ளோம்.

மாணவர்கள், எல்லோரும் தேர்வு செய்யும் துறையையே தேர்வு செய்வது சிறந்ததல்ல. மாறுபட்டு, வாய்ப்புகள் நிறைந்த பிரத்யேக துறையை தேர்வு செய்து படிக்க வேண்டும். உலகளவில் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. எனவே, சிவில் இன்ஜினியரிங் படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெருகும் என்று நம்புகிறேன். இத்துறையில் சுயவேலைவாய்ப்பும் பிரகாசமாக உள்ளது. அரசு பணியில் எதிர்காலத்தில் அதிக காலியிடங்கள் ஏற்படும் என்பதால், சிவில் துறையை பற்றி மாணவர்கள் யோசிக்கலாம்.

நர்சிங் படிக்கும் ஆண்களுக்கு அமோக வாய்ப்புகள் உள்ளன. ஆனால், இன்றும் நர்சிங் என்றாலே பெண்களுக்கான படிப்பு என்ற தவறான கருத்து நிலவுகிறது. இந்தியாவில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மென்மேலும் வளர்ச்சி பெற வேண்டும். நாமும் இன்ஜினியரிங் படிப்போம் என்ற எண்ணத்தில் படிக்கக்கூடாது. இன்ஜினியரிங் படிப்பை அனுபவித்து படிக்க வேண்டும். அப்போதுதான் சிறந்த வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.

கல்வி கற்க திறன் இல்லாத மாணவர்கள் என்று எவருமில்லை; கவனக்குறைவே முக்கிய காரணமாக உள்ளது. எனவே, கல்வியில் சிறந்துவிளங்காதவர்களை கவனக்குறைவு உள்ள மாணவர்கள் என்றே அழைக்க வேண்டும். தரமான கல்விக்கு சிறந்த பாடத்திட்டத்திம் மிக முக்கியம். தேவைக்கேற்ப பாடத்திட்டம் மேம்படுத்தப்பட வேண்டும். மாணவர்கள் தங்களை திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். கம்யுனிகேஷன் ஸ்கில்ஸ், ஆப்டிடியூட் ஸ்கில்ஸ் மிக அவசியம்.

இக்கல்வி நிறுவனத்தில் தற்போது பொறியியல், வணிகம் மற்றும் கல்வியியல் படிப்புகள் வழங்கப்படுகின்றன. அடுத்த ஆண்டு சி.பி.எஸ்.சி., பள்ளி துவக்கப்பட உள்ளது. எதிர்காலத்தில் மருத்துவ கல்லூரி துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. மருத்துவமனை கட்டும்பணி வேகமாக நடந்துவருகிறது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us