‘கல்வியைச் சேவையாகவே பார்க்கிறோம்’ | Kalvimalar - News

‘கல்வியைச் சேவையாகவே பார்க்கிறோம்’

எழுத்தின் அளவு :

ஸ்ரீராம் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் புருஷோத்தமன் அளித்த பேட்டி:

தமிழகத்தில் உள்ள தெலுங்கு மொழி பேசுபவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் தரமான கல்வி வழங்கும் நோக்கத்துடன் கடந்த 1983ம் ஆண்டுமுதல் இந்த அறக்கட்டளை செயல்பட்டுவருகிறது.

பொறியியல் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளி என அனைத்திலும் நன்கொடை பெறுவதில்லை. திருவள்ளூர் மாவட்டத்தில், கிராமப்புற பகுதியில் இவை செயல்படுவதால், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் குறைந்த கல்விக் கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் 75 லட்சம் ரூபாய் அளவில் கல்விக் கட்டண சலுகை அளிக்கப்படுகிறது. அதிக மதிப்பெண் பெற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்கள் பலர் இதன்மூலம் பயனடைகின்றனர். மாவட்ட அளவிலான போட்டிகள் முதல் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கி ஊக்குவிக்கிறோம். மாணவ, மாணவிகளின் மன அழுத்தத்தை அறிந்து, அவர்களுக்கு உரிய கவுன்சிலிங் வழங்க இரண்டு முழுநேர உளவியலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தகவல் பரிமாறுவதில் உள்ள குறைபாடு காரணமாக தன்னம்பிக்கை குறைந்து காணப்படும் மாணவர்களுக்கு கம்யூனிகேசன் ஸ்கில்ஸ் பயிற்சி அளிக்கப்படுகிறது. தகுதிவாய்ந்த ஆசிரியர்கள், சிறந்த ஆய்வகம், நூலகம், கம்பியில்லா இணைய வசதி, தனித்தனி விடுதி என அனைத்து வசதிகளையும் வழங்கி அனைவரும் வாழ்வில் முன்னேற அடித்தளமிடுகிறோம்.

தடையின்றி மின்சாரம் வழங்க, கல்லூரி வளாகத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் 100 கே.வி., அளவில் சோலார் நிறுவப்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஒ., மற்றும் என்.பி.ஏ., மதிப்பீடு பல ஆண்டுகளாக பொறியியல் கல்லூரிக்கு கிடைத்துவருகிறது. அறங்காவலர்கள் அனைவரும் லாப நோக்கமின்றி, சேவையாகவே கல்வியை அணுகுகிறோம்.

மாணவ, மாணவிகளிடம் குறைகளை நேரடியாக கேட்டு, அவற்றை உடனடியாக சரிசெய்கிறோம். வரும்காலத்தில் தங்கி பயிலும் வகையில் ரிசிடென்சியல் பள்ளி அமைக்க திட்டமிட்டுள்ளோம். வங்கித் தேர்வு மற்றும் உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க, சென்னை மாநகரில் பயிற்சி மையம் அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us