டிப்ளமோ இன் பிரெஞ்ச் படிப்புக்கும் பி.ஏ., ஆங்கில இலக்கியம் படிப்பதற்கும் எதுவும் தொடர்பு உள்ளதா? பிரெஞ்சில் பட்டப்படிப்பு படிப்பதென்றால் எங்கு படிக்கலாம்? | Kalvimalar - News

டிப்ளமோ இன் பிரெஞ்ச் படிப்புக்கும் பி.ஏ., ஆங்கில இலக்கியம் படிப்பதற்கும் எதுவும் தொடர்பு உள்ளதா? பிரெஞ்சில் பட்டப்படிப்பு படிப்பதென்றால் எங்கு படிக்கலாம்?நவம்பர் 15,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

பிரெஞ்ச் டிப்ளமோ படிப்புக்கும் பி.ஏ., ஆங்கில இலக்கிய படிப்புக்கும் வேலை தொடர்பாக எந்த தொடர்பும் இல்லை என்றே சொல்லலாம்.

தற்போதைய டிப்ளமோவை முடித்தபின் ஐதராபாத் சி.ஐ.ஈ.எப்.எல்., நடத்தும் அட்வான்ஸ்ட் டிப்ளமோ இன் பிரெஞ்ச் படிப்பை நேரடி முறையில் படிக்கலாம். அதே நிறுவனம் நடத்தும் மொழி பெயர்ப்பாளர்களுக்கான டிப்ளமோவையும் படிக்கலாம். மிக நல்ல பணிக்குச் செல்ல வேண்டுமென்றால் டில்லியிலுள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டிராவல் அண்ட் டூரிசம் மேனேஜ்மென்ட் நடத்தும் பிரெஞ்ச் சிறப்புப் பயிற்சியில் சேரலாம்.

 

மதுரை காமராஜ் பல்கலைக்கழகம் நடத்தும் பிரெஞ்ச் எம்.ஏ., படிப்பில் சேர பிரெஞ்சில் பட்டப்படிப்பு முடித்திருப்பது அவசியம். ஆனால் பிரெஞ்சில் பட்டப்படிப்பு படிப்பது எதற்காக என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us