‘உயர்கல்வியில் வேண்டும் பொதுப் பாடத்திட்டம்’ | Kalvimalar - News

‘உயர்கல்வியில் வேண்டும் பொதுப் பாடத்திட்டம்’

எழுத்தின் அளவு :

ஜான் போஸ்கோ கல்லூரி குழுமத்தின் தலைவர் வெங்கட்ராஜ் அளித்த பேட்டி:

இந்தியாவில் பொதுவாக, தொழில்நிறுவனங்களில் 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு லேபர் பிரிவு, ஐ.டி.ஐ., படித்தவர்களுக்கு ஆப்ரேஷன் பிரிவு, டிப்ளமோ படித்தவர்களுக்கு சூப்பர்வைசிங் பிரிவு, இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு டிசைனிங் பிரிவு எனப் பல்வேறு பணிநிலைகள் உள்ளன. 

பள்ளிப் படிப்பை தொடராதவர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபடாத வகையில், அவர்களுக்கு உரிய தொழிற் பயிற்சி அளிக்கவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை கையாளுக்கின்றன. இவ்வாறு குறைந்தபட்சம் ஓர் ஆண்டு படிப்புக்கூட போதுமானது. ஆனால், வெளிநாடுகளில் தொடக்கப் பணிநிலை உட்பட எந்த பணிக்கும் குறைந்தது 5 ஆண்டுகள் படிப்பு தேவைப்படுகிறது.

மாறுப்பட்ட பாடத்திட்டம்

இந்தியாவில், சி.பி.எஸ்.சி., மாநிலப் பாடத்திட்டம் என பள்ளி பாடத்திட்டத்தில் மட்டுமல்ல, உயர்கல்வியிலும் வேறுபாடுகள் உள்ளன. மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு தகவல் தொடர்பில் தாழ்வு மனப்பான்மை உருவாகி, கல்லூரியிலும் அது அதிகரித்து அதிகரித்து வேலை வாய்ப்பில் திணறும் நிலையை காண முடிகிறது. எனவே, ‘இன்பீரியாரிட்டி’, ‘சூபீரியாரிட்டி’ இரண்டும் ஏற்படாதவகையில் தன்னம்பிக்கை வளர்க்கும், செயல்முறையில் பொதுவான பாடத்திட்டம் பின்பற்றப்பட வேண்டும். 

பாடத்திட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும், நாட்டின் பிற பல்கலைக்கழகத்திற்கும் உள்ள வேறுபாடு, வெளிநாடுகளில் உயர்கல்வி அல்லது வேலைவாய்ப்பின்போது, எந்த பாடத்திட்டம் சிறந்தது? என்பதில் கேள்வி எழுப்பப்படுகிறது. எனவே, எது சிறந்த பாடத்திட்டமோ அதை நாடுமுழுவதும் அனைத்து கல்வி நிறுவனங்களும் பின்பற்றும் வகையில் மாற்றம் கொண்டுவரப்படவேண்டும்.

பொது ஆய்வகம்

ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் அனைத்து நவீன தொழில்நுட்பமும் அடங்கிய ஆய்வகத்தை ஏற்படுத்துவது கடினம். எனவே, அனைத்து கல்வி நிறுவனங்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகையை பெற்று பொதுவான ஒரு ஆய்வகத்தை அரசாங்கம் ஏற்படுத்த முன்வரவேண்டும். சர்வதேச அளவில் அறிமுகப்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பம் அந்த ஆய்வகத்தில் இடம்பெற வேண்டும். அவற்றை அனைத்து கல்வி நிறுவன மாணவ, மாணவிகளும் பயன்படுத்தும் வகையில் கால அட்டவணை தயாரிக்கப்படவேண்டும். அப்போது, நவீன தொழில்நுட்பம் குறித்த அறிவு அனைவருக்கும் சாத்தியமாகும்.

அரசு சலுகையில் மாற்றம்?

முதல் பட்டதாரிகளுக்கான சலுகை, பின்தங்கிய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு என அரசாங்கம் நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால், அவற்றில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். கட்டணத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கு அந்த மாணவரிகளிடமும் வசூலிக்கும் பட்சத்தில் இடைநிற்றலின்றி கல்லூரிக்கு தொடர்ந்து வருவார்கள்.

வேலைவாய்ப்பை எளிதாக்க, மாணவர்கள் சிறந்த முறையில் தங்களது பயோ-டேட்டாவை தயாரிக்கவேண்டும். ரெகுலர் பாடத்திட்டத்துடன் தனித்திறன்களையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு சிறந்த பயிற்சியுடன் கூடிய கல்வி அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட எங்கள் கல்லூரி, எளிய பயணித்தில் அடையும் வகையில் திருவள்ளூர் ரயில்நிலையத்திற்கு அருகிலேயே அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us